ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்தது சரியா?.. என்ன மாதிரி கதை இது – மைக் ஹசி ஓபன் பதில்

0
1419
Hussey

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிளே ஆப் சுற்றுக்கு மிக முக்கியமான போட்டியில் நேற்று வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட சர்ச்சையான ரன் அவுட் குறித்து, சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 142 ரன்களை நோக்கி விளையாடியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த பொழுது ரவீந்திர ஜடேஜா கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து விளையாட வந்தார். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை முழுவதுமாக கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டி இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். அவர் ஒரு பந்தை தூக்கி நேராக சிக்ஸருக்கு அடிக்க, எல்லைக்கோட்டில் நின்ற ஜோஸ் பட்லர் திறமையாக அதை தடுத்து, எல்லைக் கோட்டுக்கு வெளியே வீசினார். தொடர்ந்து ஜடேஜா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார்.

இந்த நிலையில் ஆவேஷ் கான் பந்தை கட் ஷாட் விளையாடி, இரண்டு ரன்கள் எடுக்க முயலும் பொழுது, பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது சஞ்சு சாம்சன் பந்தை எடுத்து நேராக பந்துவீச்சாளர் முனைக்கு அடிக்க, அப்போது அங்கு ஓடிய ஜடேஜா பந்தை தடுத்து விட்டார். அவர் ஓடத் தொடங்கிய திசையிலேயே திரும்பாமல், பந்து வந்த திசைக்குத் திரும்பி பந்தை தடுத்தார். எனவே ரன் அவுட் செய்யும் பொழுது இடையூறு உண்டாக்கியதாக அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசி இருக்கும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும் பொழுது “போட்டியின் போது அதை எனக்கு நிறுத்தி நிதானமாக பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை எனவே நான் விரைவாகத்தான் பார்த்தேன். அவர் முயற்சி செய்து திரும்பினார், அது பந்தின் கோணத்தை தடுப்பதாக அமைந்தது. அதே திரும்பி ஓடும்பொழுது கோணத்தை வேண்டுமென்றே மாற்ற முயற்சி செய்யவில்லை. நடந்த விஷயத்தின் கதையை இரண்டு பக்கமும் என்னால் பார்க்க முடிகிறது. அவர் கூடிய வேகத்தில் திரும்பும் பொழுது மட்டுமே கொஞ்சம் கோணம் மாறிவிட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு எதிரா.. எங்க பேட்ஸ்மேன்களுக்கு இந்த எண்ணமே இல்ல.. எப்படி ஜெயிக்க? – சங்கக்கரா விமர்சனம்

நடுவர் என்ன காரணத்தினால் இப்படியான முடிவை எடுத்து இருக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஓடும்பொழுது திடீரென உங்களுடைய திசையை மாற்றிக் கொள்ள முடியாது என விதி சொல்கிறது. ஒருவேளை இதன் அடிப்படையில் நடுவர் கொடுத்த தீர்ப்பு நியாயமானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.