ருதுராஜுக்கு கேப்டனா திடீர்னு.. இப்ப இந்த புது தலைவலி உருவாகி இருக்கு.. பாலாஜி பேட்டி

0
358
Ruturaj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே விளையாட இருக்கிறது. மேலும் இரண்டு போட்டிகள் வெளியில் விளையாடி மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் சிஎஸ்கே அணி தொடர்ந்து மூன்று போட்டிகளை சென்னையிலேயே விளையாடுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் துவக்க ஆட்டக்காரர் கான்வே மற்றும் இறுதிக்கட்ட ஓவர் பந்துவீச்சாளர் பதிரனா இருவரும் காயம் அடைந்தார்கள். இதில் கான்வே ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் கிடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான். அவருடைய இடத்திற்கு ரச்சின் ரவீந்திரவை சிஎஸ்கே கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் காயமடைந்த சிஎஸ்கே அணிக்கு திரும்பி விட்டார். மேலும் அவர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். எனவே இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் போட்டியில் பதிரனா இடத்தில் விளையாடிய முஸ்தஃபிஸூர் ரஹ்மான் மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் உருவாக்கத்தில் பதிரனா எல்லா போட்டிகளையும் விளையாட கூடிய வீரராக இருக்கிறார். எனவே அவர் எப்போது அணிக்கு திரும்பி வந்தாலும் அவருக்கு உடனே விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இதேதான் நடந்தது. தற்பொழுது பதிரனா திரும்பி வந்திருக்கும் நிலையில், யாரை நீக்குவார்கள்? இல்லை அவரையே வெளியில் வைப்பார்களா? என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து லட்சுமிபதி பாலாஜி கூறும் பொழுது “வெளிப்படையாக முஸ்தபிஷூர் ரஹ்மான் சி எஸ் கே அணிக்காக முதல் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். பிராவோ இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு என்ன மாதிரியான பங்களிப்பை கொடுத்தாரோ, அதை நேரடியாக உள்ளே வந்து பதிரனா கொடுத்திருக்கிறார். எனவே இருவரும் தற்போது முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள்.தற்பொழுது பதிரனாவின் இடம் என்பது வாய்ப்பு கொடுக்கப்பட்ட மற்ற பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொருத்துதான் அமையும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியானது.. ரோகித் படைக்கு ஸ்பெஷல் வியூகம்

ஏனென்றால் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் பவர்பிளேவிலும் பந்து வீசமுடியும் இறுதிக் கட்டத்திலும் பந்து வீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்களின் பார்வையில் புதிய கேப்டன் ருதுராஜ் அவர்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் கொடுப்பவர் ஆக இருக்க வேண்டும். தற்பொழுது எல்லோரும் சிறப்பாக செயல்பட்டு இருப்பது கேப்டனாக ருதுராஜிக்கு நல்ல தலைவலியாக அமையும். தீபக்சகர், சர்துல் தாக்கூர் மற்றும் பதிரனாவை வைத்து தோனி என்ன செய்தார் என்பதை ருதுராஜ் பார்க்க வேண்டும். அவர் தற்பொழுது நல்ல அறிவுரைகளை ஏற்று தைரியமாக செல்ல வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.