வெளிய ஒழுங்கா இருக்கனும்.. விதியை மீறிய பொல்லார்டு டிம் டேவிட்.. பிசிசிஐ விதித்த அபராதம்

0
29
MI

நடப்பு ஐபிஎல் தொடரில் சில தினங்களுக்கு முன்பாக பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த போட்டியில் களத்திற்கு வெளியே இருந்து விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு மற்றும் டிம் டேவிட் இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது.

குறிப்பிட்ட அந்த போட்டியின் போது சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு வீசப்பட்ட ஒரு பந்து வைடாக இருக்கலாம் என்று நினைக்கப்பட்டது. ஆனால் கள நடுவர் அதற்கு வைடு கொடுக்க மறுத்து விட்டார்.

- Advertisement -

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் வைடு,நோ-பால் தொடர்பாக விளையாடும் அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன்கள் மூன்றாவது நடுவரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்கின்ற விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த விதியின்படி சூரியகுமார் வீசப்பட்ட பந்து வைடு இல்லை என்கின்ற மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் களத்திற்கு வெளியே இருந்த கீரன் பொல்லார்டு மற்றும் டிம் டேவிட் இருவரும் மேல்முறையீட்டுக்கு செல்லுமாறு சூரியகுமார் யாதவுக்கு சிக்னல் செய்தார்கள்.

இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் மேல்முறையீட்டுக்கு செல்ல, குறிப்பிட்ட அந்த பந்து வைடு என தெரியவந்தது. ஆனால் கிரிக்கெட் விதிகளின்படி வெளியில் இருக்கக்கூடியவர்கள் இப்படியான விஷயங்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடாது. ஆனால் இதை மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு மற்றும் டிம் டேவிட் இருவரும் மீறி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் ஹைடன் கில்கிறிஸ்ட் செய்ய முடியாத இதை தோனி செய்கிறார்.. இது ஸ்பெஷல் குவாலிட்டி – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

இவர்கள் இருவரும் லெவல் 1 குற்றங்களை செய்திருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் இவர்களது போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை அபராதமாக விதித்திருக்கிறது. மேலும் இப்படியான செய்கைகளில் யாரும் தொடர்ந்து ஈடுபடக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.