சச்சின் ஹைடன் கில்கிறிஸ்ட் செய்ய முடியாத இதை தோனி செய்கிறார்.. இது ஸ்பெஷல் குவாலிட்டி – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

0
675
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக கடைசி கட்டத்தில் தோனி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய ஸ்டிரைக் ரேட் குறைந்தது 250க்கு மேல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டி பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 16 பந்துகளில் 37 ரன்கள், மும்பை அணிக்கு எதிராக 4 பந்தில் 20 ரன்கள், நேற்று லக்னோ அணிக்கு எதிராக 8 பந்தில் 28 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் அவர் காட்டும் அதிரடி முன்பிருந்ததை விட மிகச் சிறப்பாக இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

- Advertisement -

தற்பொழுது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட முடியாத அளவுக்கு காலில் பிரச்சனை இருக்கின்ற காரணத்தினால், அவர் கடைசி இரண்டு மூன்று ஓவர்களுக்கு மட்டுமே பேட்டிங் செய்ய வருகிறார். ஆனால் அதையும் மிகச்சிறப்பாக எப்படி பயன்படுத்தி கொள்வது என்பதில் அவர் காட்டும் புத்திசாலித்தனம் பிரமாதமானதாக இருக்கிறது.

அவர் சிக்ஸர் அடிக்கும் திசைகள் அபாரமானதாக இருக்கிறது. அவர் ஓவர் கவர் திசையில் சிக்சர் அடிப்பதை பலரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் எந்த பயிற்சியும் இல்லாமல் நேராக ஐபிஎல் தொடருக்கு வந்து, ஓவர் கவர் திசையில் ஒருவர் தவறாமல் சிக்சர் அடிப்பது என்பது இதுவரையில் நடந்திருக்காத ஒரு விஷயமாக இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசும்பொழுது “சச்சின் ஹைடன் கில்கிரிஸ்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் வந்து விளையாடினார்கள். ஆனால் அவர்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் அவர்களால் தங்களை சரியாக பொருத்திக் கொண்டு விளையாட முடியவில்லை. இந்த விஷயத்தில் இவர்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால் தோனியை பாருங்கள் அவருக்கு வயது 42, ஆனால் இந்த வயதிலும் அவர் விளையாடும் விதம் அவர் தகுதியை காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் ரூல் தேவையா?.. ரோகித் சர்மா கருத்துக்கு ரிக்கி பாண்டிங் அதிரடி பதில்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் தோனி மிகவும் பரபரப்பாக இருந்தார். சிஎஸ்கே அணியின் மற்ற பேட்டர்களால் பந்தை சரியாக டைம் செய்ய முடியவில்லை. களத்தில் நீண்ட நேரம் நின்ற ஜடேஜாவால் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆனால் உள்ளே வந்த உடனேயே அவர் விளையாடிய விதத்தில் தோனி ஆடுகளத்தை பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பது போல காட்டினார்” என்று கூறியிருக்கிறார்.