இலங்கை பங்களாதேஷ் அணிகள்.. எல்லை மீறும் வம்பு.. ஹெல்மெட் செலிப்ரேஷன்.. நடந்தது என்ன?

0
205
Bangladesh

சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாக களத்தில் உரசல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது இலங்கை அணி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்திருப்பதிலும் தொடர்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில், இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தாமதமாக பேட்டிங் செய்ய வந்த காரணத்தினால் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

டைம் அவுட் முறையில் பங்களாதேஷ் அணி அவுட் அப்பீல் கேட்டது. நேரத்தை பரிசோதித்துப் பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என தீர்ப்பு கொடுத்தார். இந்த நேரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் தன்னுடைய ஹெல்மெட்டின் பட்டை பிரிந்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே புது ஹெல்மெட்டை கேட்டதால் நேரம் கடந்துவிட்டது என்றும், இதற்கு அவுட் கேட்டு போக வேண்டாம் என்றும், அப்போதைய பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் கேட்டுக் கொண்டார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் 10 அணிகளில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கே, பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் அடுத்த வருடம் இடம் கிடைக்கும் என்கின்ற காரணத்தினால், ஷாகிப் அல் ஹசன் மேத்யூஸ் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறி சென்றார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முன் உரசல் இன்னும் அதிகமானது.

எல்லை மீறும் வம்பு

இந்த நிலையில் இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதலில் பங்களாதேஷை சேர்ந்த சோரிஃபுல் இஸ்லாம் விக்கெட்டை கைப்பற்றி டைம் ஆகிவிட்டது என்பது போல டைம் அவுட் செலிப்ரேஷன் செய்தார்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றிய இலங்கை அணியினர்,கோப்பையை வாங்கும் நிகழ்வில், இதற்கு பதிலடி தரும் விதமாக பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் செய்த டைம் அவுட் செலிப்ரேஷனை செய்தார்கள். ஆனால் இதை விட்டு வெளியே வரவேண்டும் என பங்களாதேஷ் கேப்டன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : தோனியை ஜெயிக்கனும் ஆனா ஜெயிக்க கூடாது.. காரணம் என்ன தெரியுமா? – பாப் டு பிளெசிஸ் பேட்டி

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்று, பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. இதில் கோப்பையை வென்ற நிகழ்வில், மேத்யூஸ் ஹெல்மெட் பட்டை பிரிந்து விட்டதாக காட்டி சாகிப் அல் ஹசனிடம் பேசியதை போலவே, பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர் முஸ்பிக்யூர் ரஹீம் நடித்துக் காட்டினார். ஹெல்மெட்டை வைத்து அதேபோல் செய்து பங்களாதேஷ் அணி பதிலடியாக செலிப்ரேஷன் செய்தது. இப்படி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உரசல் ஒவ்வொரு போட்டியிலும் அதிகமாகிக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது!