தோனியை ஜெயிக்கனும் ஆனா ஜெயிக்க கூடாது.. காரணம் என்ன தெரியுமா? – பாப் டு பிளெசிஸ் பேட்டி

0
289
Faf

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளிசிஸ் ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும் பகுதி சிஎஸ்கே அணி உடனும் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடனும் தொடர்புடையது. அவருடைய வயது காரணமாக 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் பெரிய விலை கொடுத்து வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முன்னே போகவில்லை.

அதே சமயத்தில் தங்கள் அணிக்கு ஒரு கேப்டன் தேவை என்கின்ற காரணத்தினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை 7 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியது. இதுவரை இரண்டு சீசன்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருந்துள்ள ஃபாப், ஒருமுறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த முறை கடைசி போட்டியில் தோற்று ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை ஆர்சிபி இழந்தது.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்காத பொழுது, பாப் மிகவும் வருத்தப்பட்டு இருந்தார். சம்பளம் என்பதை தாண்டி அந்த அணியோடு மிகவும் ஒன்றிவிட்ட காரணத்தினால், அணியை விட்டு பிரிவது மிகவும் வருத்தமான ஒன்றாக இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கும் மற்றும் அதன் ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாத சில போட்டிகளை அவர் ஆடிக் கொடுத்திருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டம் வென்ற இரண்டு சீசன்களில் அணியின் ஒரு அங்கமாகவும் இருந்திருக்கிறார்.

குறிப்பாக அவருடைய கடைசி சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த ஆண்டு ருத்ராஜ் அதிக ரன்கள் அடித்த வீரராக இவரை விட ஒருவன் கூடுதலாக பெற்று பர்பிள் தொப்பியை வென்றார். துவக்க வீரராக ருதுராஜை சிறப்பாக வழி நடத்திக் கொண்டு வந்திருந்தார். அடுத்த சீசனில் ருத்ராஜ் வெளிப்படையாக அவரை இழந்ததாக கூறியிருந்தார். முழுக்க முழுக்க அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கக்கூடிய வீரர்.

- Advertisement -

தோனி என் அண்ணன் மாதிரி

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் கேப்டன் தோனிக்கும் தனக்கும் இருக்கும் உறவு பற்றி பேசி உள்ள அவர் கூறும் பொழுது “தோனி எப்பொழுதும் சிறந்த கேப்டன். அவருடன் பல வருடங்கள் ஒன்றாக நேரத்தை செலவு செய்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. சென்னை அணியில் நான் இருந்தது என்னுடைய தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். என்னை ஒரு கேப்டனாக வடிவமைத்த இடம் அதுதான். நான் அவரை என்னுடைய பெரிய அண்ணன் போல பார்க்கிறேன். நீங்கள் அவரை வெல்ல விரும்புகிறீர்கள் ஆனால் வெல்லக்கூடாது. ஏனென்றால் அவ்வளவு மரியாதை அவர் மேல் இருக்கிறது.

இதையும் படிங்க : மீடியா முன்னாடி வரக்கூடாதுனு இருந்தேனா?.. 2 மாசம் இல்லதான் – மவுனம் கலைத்த விராட் கோலி

கடந்த சில ஐபிஎல் தொடருக்கும் முன்பாக மேக்ஸ்வெல் திறமையை யாரும் முழுதாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஆர்சிபி அணிக்கு வந்த பிறகு அவர் தொடர்ச்சியாக ரன்கள் எடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு அவருடன் நான் பேட்டிங் செய்யும்பொழுது எனக்கு பேட்டிங் செய்வது சுலபமாக மாறியது. அவர் சுழற் பந்துவீச்சாளர்களை இரக்கமில்லாமல் அடிக்கக் கூடியவர். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய பார்ம் தொடரும்” என நான் நினைக்கிறேன்.