ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று நாளை நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஆன பில் சிம்மன்ஸ் வங்கதேச அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறது. லீக் சுற்று தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பின்னர் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. இதில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை ஏற்கனவே ஒரு முறை வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்திய அணி வலுவாக இருக்கும் நிலையில் இந்திய அணியை தங்களால் வீழ்த்த முடியும் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். கடந்த கால வரலாறுகளை எதுவும் நினைவில் கொள்ளாமல் அன்றைய நாள் ஆட்டத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெற்றி பெறும் எனவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஒவ்வொரு அணிக்கும் இந்திய அணியை வீழ்த்தும் திறன் இருக்கிறது. அன்றைய நாள் ஆட்டத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெற்றி பெறும். இந்திய அணி முன்பு என்ன செய்தது என்பது முக்கியமல்ல அந்த மூன்றரை மணி நேர ஆட்டத்தில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்திய அணியின் திட்டத்தில் தவறுகளை செய்ய முயற்சி செய்வோம். அப்படித்தான் நாங்கள் போட்டிகளில் வெற்றி பெறுகிறோம்.
இதையும் படிங்க:IND vs BAN.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அணியை மாற்றும் கம்பீர்.. பைனலுக்கு இந்திய அணி தகுதி பெறுமா?
ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு பரபரப்பு இருக்கும் குறிப்பாக இந்திய அணி நம்பர் ஒன் டி20 அணி என்பதால் அந்த பரபரப்பு என்பது எப்போதுமே அடங்காது. அந்த பரபரப்புக்கு ஆளாகாமல் தனித்து நின்று அந்த தருணத்தை அனுபவித்து எங்களால் முடிந்ததை சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் பேசியிருக்கிறார்.