நாளை இந்திய அணி ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் கம்பீர் ஒரு மாற்றத்தை செய்வாரா? என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகள் தங்களது முதல் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான மற்றும் மோசமான வரலாறு
இனிய அணி இதுவரையில் எட்டு முறை ஆசியக் கோப்பை தொடரை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணி இதுவரையில் ஒரு முறை கூட ஆசியக் கோப்பையை வென்றது கிடையாது.
மேலும் பங்களாதேஷ் அணி இரண்டாவது சுற்றில் வலிமையான இலங்கை அணியை வீழ்த்தி நம்பிக்கையுடன் களம் இறங்க இருக்கிறது. அந்த அணி தற்போது முழுமையான ஐந்து பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகிறது. ஆடுகளம் தற்போது பேட்டிங் செய்ய சாதகமாக மாறி இருப்பதால், பங்களாதேஷ் அணியின் இந்த திட்டம் நல்ல முறையில் பலன் கொடுக்கிறது.
கம்பீர் அணியை மாற்ற வாய்ப்பு
எனவே இந்திய அணியும் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக மாறிவிட்டதால் ஆல் ரவுண்டர் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருடைய இடத்தில் முழுமையான வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங்கை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியா அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.
மேலும் கூடுதல் வேகப் பந்துவீச்சாளரை உள்ளே கொண்டு வருவதன் மூலம் பும்ராவை பவர் பிளேவில் குறைந்த ஓவர்கள் மட்டுமே வீச வைக்கலாம். இதன் மூலம் இறுதி கட்டத்தில் அவரால் நல்ல தாக்கத்தை கொடுக்க முடியும். ஆனால் கம்பீர் பழைய அணி உடனே செல்லத்தான் விரும்புவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : எங்க பாகிஸ்தான் மூளை இல்லாத கோச்ச பார்த்தா.. நான் பிராடு மாதிரி தெரியறேன் – சோயப் அக்தர் விமர்சனம்
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, கில் திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.






