விராட் கோலியை சந்திக்கும் போதெல்லாம்.. நான் இதுக்குதான் ட்ரை பண்ணுவேன் – பாபர் அசாம் பேட்டி

0
35
Virat

தற்பொழுது இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கி மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களின் நான்காவது போட்டியில் விளையாடி முடித்திருக்கின்றன. ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்காத காரணத்தினால், அவர்கள் தற்போது ஓய்வில் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பாபர் அசாம் விராட் கோலி குறித்து முக்கியமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. நியூசிலாந்தின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு வந்து விட்டதால், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர்களிடம் இருக்கும் மற்ற வீரர்களைக் கொண்டு இரண்டாம் கட்ட அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது.

- Advertisement -

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரை பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. எனவே நடக்க இருக்கும் டி20 தொடரில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று தெரிகிறது. அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து தற்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரவில்லை.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக தயாராக வித்தியாசமான முறையில் ராணுவத்துடன் இணைந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது இந்த பயிற்சி முகாமில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பேசும் பொழுது “இது எனக்கு மூன்றாவது முகம். நான் இப்படியான முகாமுக்கு வரும் ஒவ்வொரு முறையும் பல நுண்ணறிவுகளை பெற்று இருக்கிறேன். இந்த முகாம் உடல் தகுதியை மேம்படுத்துவதோடு வீரர்களிடையே நல்ல நட்பு பிணைப்பை உருவாக்குவது சம்பந்தப்பட்டது. எங்கள் அணி இருக்கக்கூடிய சூழலில் இது மிகவும் முக்கியம். மேலும் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு செயல் திறனும் அவசியமாகிறது. எனவே இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி ரோகித் கிடையாது.. இப்ப உலகத்துல சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

மேலும் நான் விராட் கோலியை சந்திக்கும்போதெல்லாம் அவரிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். அவர் மிகவும் சிறந்த ஒரு வீரர். எனவே சிறந்த வீரராக இருப்பதால் அவரிடம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது, அதை பயனுள்ள முறையில் மாற்ற, நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.