டி20 உலக கோப்பை.. ஆஸிக்கு ஆரம்பிக்கும் முன்பே உண்டான பிரச்சனை.. பயிற்சியாளர் தகவல்

0
717
Marsh

தற்போது வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 257 ரன்கள் குவித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவான ஒரு விஷயத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா வீரர்கள் கிளன் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் டிராவிஸ் ஹெட், ஆகியோர் லீக் சுற்று முடிவடைந்தும் பிளே ஆப் சுற்றில் விளையாடினார்கள். இதன் காரணமாக டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கான இரண்டு பயிற்சி போட்டிகளிலும் இவர்களால் விளையாட முடியவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராமல் இருக்கிறார். இது அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது சம்பந்தமாக பேசி இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் “அவர் நேற்று இரவு போட்டியில் அதிக நேரம் பில்டிங் செய்தார். இதன் மூலம் அவருக்கு தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது. உலகக் கோப்பை முதல் போட்டிக்கு அவர் தயாராகி விட்டார் என்பது போல தெரிகிறது. ஆனால் அவருக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையாதுதால் பந்து வீச முடியாது.

ஒரு டி20 போட்டியில் 260 ரன்கள் விட்டுத் தருவது என்பது சரியானது கிடையாது. நாங்கள் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நிறைய ரன்கள் விட்டு தந்து விட்டோம். அதே சமயத்தில் நாங்கள் சில விஷயங்களில் வேலை செய்து வருகிறோம். அதனால் தான் இப்படி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதேபோல் சில விஷயங்களில் வேலை செய்கிறது” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளை டி20 உ. கோ பயிற்சி போட்டி.. இந்தியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ரோகித் நெருக்கடி தீர்ந்தது

தற்பொழுது மிச்சல் மார்ஸ் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அணியில் இடம் பெறும் பொழுது, கட்டாயமாக கேமரூன் கிரீன் போன்ற ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டரை அணியில் சேர்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. இல்லையென்றால் அவருடைய இடத்தில் ஒரு முழுமையான பேட்ஸ்மேனை விளையாட வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைக்கு ஏற்ற ஆஸ்திரேலியா அணி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!