நாளை டி20 உ. கோ பயிற்சி போட்டி.. இந்தியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ரோகித் நெருக்கடி தீர்ந்தது

0
789
Rohit

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் நாளை இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் பயிற்சி போட்டி நடைபெற இருக்கிறது. தற்பொழுது இது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரே ஒரு பயிற்சி போட்டி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த முக்கியமான பயிற்சி போட்டியில் விராட் கோலி தாமதமாக அணியில் இணைகின்ற காரணத்தினால் விளையாட முடியாது.

- Advertisement -

புதிய சூழ்நிலையான அமெரிக்க சூழ்நிலைக்கு பழகுவதற்கும், அணியின் காம்பினேஷனை கண்டறிவதற்கும், வீரர்களின் தற்போதைய பார்மை தெரிந்து கொள்வதற்கும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு நாளை நடக்க இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மிகவும் முக்கியமானது ஆகும்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஜெய்ஸ்வால் துவக்க இடத்தில் வருவது குறித்தும், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரில் யார் விக்கெட் கீப்பர்? என்பதும் பெரிய கேள்விகளாக இருந்து வருகிறது. எனவே பயிற்சி போட்டியில் இதற்கான விடையை கேப்டன் ரோகித் சர்மா கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது.

இப்படியான நிலையில் அமெரிக்காவில் வைத்து நடத்தப்படும் பயிற்சி போட்டிகள் பெரும்பாலானவை மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் நாளை இந்தியா பங்களாதேஷ் போதிக் கொள்ளும் பயிற்சி போட்டியின் போது மழை அச்சுறுத்தல் இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலை 16 முதல் 18 டிகிரி என விளையாடுவதற்கு சீராக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் டிராவிட் பயிற்சியில் போட்ட புதிய திட்டங்கள்.. வித்தியாசமாக வந்த 2 வீரர்கள்.. ஹர்திக் ஸ்பெஷல் கவனிப்பு

இந்த செய்தியால் இந்திய முகாம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இது மிகவும் உற்சாகம் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. நாளை அவர் தனக்கு சந்தேகம் இருக்கும் வீரர்கள் மற்றும் காம்பினேஷனை பரிசோதிப்பதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது!