உலக கிரிக்கெட்

431/2.. நொறுக்கி தள்ளிய ஆஸி.. கிரீன் ஹெட் ஆடிய ருத்ர தாண்டவம்.. படைத்த பல சாதனைகள்.. தெ.ஆ பரிதாபம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே தொடரை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி தொடக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு அபாரமாக விளையாடிய தொடக்க ஜோடியில் இருவரும் சதம் அடித்து 250 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மிட்சல் மார்ஸ் 106 பந்துகளில் 100 ரன்கள், டிராவிஸ் ஹெட் அதிரடியாக 80 பந்துகளில் சதம் அடித்து 17 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 142 ரன்கள் குவித்தார்கள். இதனால் ஆசிரியர் அணிக்கு மிக வலிமையான துவக்கம் ஏற்பட்டது.

- Advertisement -

கேமரூன் கிரீன் ருத்ர தாண்டவம்

இதைத் தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு வந்த கேமரூன் கிரீன் 47 பந்தில் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 55 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து விளையாடிய அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 37 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : நாசமாகும் சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை.. கேரளாவில் நடந்த பரிதாப சம்பவம்.. ஜிதேஷ் சர்மாவுக்கு அதிர்ஷ்டம்

இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 434 ரன்கள் ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக எடுத்திருந்தது. தற்போது இது இரண்டாவது அதிகபட்ச ரன்னாக மாறி இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 40 பந்தில் மேக்ஸ்வெல் சதம் அடித்திருக்கிறார். தற்போது கிரீன் 47 பந்தில் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts