தற்போது ஆசியக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் மிடில் வரிசையிலும் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் திடீரென உருவாகி இருக்கிறது.
ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர்கள் இடத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சஞ்சு samsung மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
சாம்சன் செய்த முயற்சி
தற்போது இந்திய டி20 அணிக்கு கில் உள்ளே கொண்டுவரப்பட்டு இருப்பதோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டு இருப்பதால் நிச்சயம் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார். அவருடன் இணைந்து அபிஷேக் ஷர்மா துவங்குவார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு டாப் ஆர்டரில் இடம் கிடைக்காது. எனவே அவர் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டியதாக இருக்கலாம். நிலையில் கேரள டி20 லீக் தொடரில் சஞ்சு சாம்சன் ஆறாவது இடத்தில் களம் இறங்கி விளையாடி தன்னை தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.
பரிதாப முடிவு
இந்த நிலையில் நேற்று கேரளா டி20 லீக் தொடரில் சஞ்சு சாம்சன் ஆறாவது இடத்தில் தனது அணிக்காக களம் இறங்கினார். மொத்தம் 22 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு பவுண்டரியும் அடக்கம். அவருடைய ஸ்டிரைக் ரேட் 60க்கும் கீழ் இருந்தது. அவரால் மிடில் வரிசையில் தாக்கி விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க : கைவிட்ட கம்பீர் அகர்கர்.. புஜாரா எடுத்த சோகமான முடிவு.. உருக்கமான அறிக்கை.. இந்திய ரசிகர்கள் பரிதாபம்
அதே சமயத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா கீழ் வரிசையில் அதிரடியாக விளையாட கூடியவர். இந்த வருடம் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு முக்கியமான காரணமாக கீழ் வரிசையில் பேட்டிங் செய்திருக்கிறார். எனவே இயல்பாகவே கீழ் வரிசைக்கு சரியான பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். அப்படி கிடைத்தால் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிடும். கில் வருகையின் காரணமாக பெரிய அளவில் சஞ்சு சாம்சன் பாதிக்கப்பட போகிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






