ரிஷப் பண்ட்க்கு அதிரடியாக விளையாட தடை.. சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

0
815
Rishabh

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு பிசிசிஐ அதிரடியாக ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளை வென்று 12 புள்ளிகள் உடன், புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வருகிறது.

- Advertisement -

டெல்லி அணி அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கிறது. இதற்கு அடுத்து லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படியான நேரத்தில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு மூன்று போட்டிகளில் தாமதமாக பந்து வீசிய காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒரு போட்டியில் விளையாட தடையும் தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டான்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் பந்து வீசுவதற்கு 20 ஓவர்களுக்கு 85 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது. இதற்குள் பந்து வீசி முடிக்கப்பட வேண்டும். ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு அணி மூன்று முறை கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பந்து வீசினால், அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். தற்பொழுது இதன் காரணமாக ரிஷப் பண்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் ஹர்திக்கை பழிவாங்க நினைக்கல.. அவர் நினைக்கிற விஷயமே வேற – மைக்கேல் கிளார்க் பேட்டி

மேலும் டெல்லி அணி போலவே 12 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று இருக்கும் சிஎஸ்கே அணிக்கும், 12 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று இருக்கும் ஆர்சிபி அணிக்கும், ரிஷப் பண்ட் விளையாட முடியாமல் போவது அதிர்ஷ்டமான விஷயமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இப்போதைக்கு இந்த இரண்டு அணிகளுக்கும் டெல்லி பெரிய போட்டியான அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது!