ஒரே டீம்.. ஆனா ஸ்டப்ஸ்க்கு வலையில் பந்து வீச மறுக்கும் குல்தீப்.. கிரேட்டான காரணம்

0
4879
Kuldeep

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிக மோசமாக அமைந்தது. பிறகு ஜாக் பிரேசர் மெக்கர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இவர்களின் பேட்டிங் எழுச்சி டெல்லி அணிக்கு புதிய பாதையை வகுத்தது. தற்பொழுது கடைசி இரண்டு போட்டிகளை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் குள்தீப் யாதவ் பற்றி அந்த அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முக்கிய விஷயம் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

விபத்தில் சிக்கி மீண்டு வந்த ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணி தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறது. அவர்களுடைய பவுலிங் யூனிட்டில் ராசிக் சலாம் திடீரென மிடில் ஓவர்களில் சிறப்பாக உருவெடுத்து இருப்பது, அந்த அணிக்கு கிடைத்த பேட்டிங் யூனிட் பலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

அத்தோடு இந்திய அணியின் அனுபவ வீரர் கசுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவின் திறமையான பந்துவீச்சு, டெல்லி அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான அணியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சில விஷயங்கள் சரியாக அமைய, தற்பொழுது அவர்கள் திடீரென ஆபத்தான அணியாக உருவெடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி அணிக்கு பினிஷிங் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அவர் ஒரே அணிக்காக விளையாடினாலும் கூட வலைப் பயிற்சியில் தனக்கு குல்தீப் யாதவ் பந்து வீசுவதில்லை என்கின்ற ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் கூறும் பொழுது ” நான் வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவையின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் அவர் எனக்கு பந்து வீச மறுத்துவிட்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாத அளவுக்கு மாறிவிட்டது. நிச்சயமாக அடுத்து வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, அவரது பந்துவீச்சை நான் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மர்மமாக வைத்திருக்க அவர் விரும்புகிறார் என்று புரிந்து கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி மக்களை மகிழ்விக்கிறார்.. வேற என்ன வேணும்? அவருக்கே எல்லாம் தெரியும் – சேவாக் கிண்டலான பேச்சு

பொதுவாக ஐபிஎல் தொடர் விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் எல்லா மைதானங்களிலும் விளையாடி, இந்திய சூழ்நிலைக்கு மிகவும் நன்றாக பழகி விடுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது சிரமமாக இருப்பதில்லை. ஆனால் குல்தீப் யாதவ் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து தனது பந்துவீச்சை தன் அணி வீரருக்கே காட்டிக் கொடுக்காமல் இருந்து வருவது வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது!