5வது டெஸ்ட்.. ரஜத் பட்டிதார் இடத்தில்.. 7 இன்னிங்ஸில் 4 சதம் அடித்த வீரருக்கு வாய்ப்பு என தகவல்

0
878
Rajat

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரையில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த நான்கு போட்டிகளில் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. இதற்கு அடுத்து தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் மார்ச் மாதம் ஏழாம் தேதி தொடங்கி பதினொன்றாம் தேதி வரையில் இமாச்சல் பிரதேச மாநில தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத பொழுதும் கூட, மிகத் தைரியமாக மூத்த வீரர்களிடம் செல்லாமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சாதித்திருக்கிறது.

இதில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ரஜத் பட்டிதார் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் 32, 9, 5, 0, 17, 0 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் ஏமாற்றம் கொடுத்தார். இந்த நிலையில் இவருடைய சொந்த மாநில அடியான மத்திய பிரதேஷ் அணி ரஞ்சி கிரிக்கெட் தொடரில் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இப்படியான நிலையில் இவரை ரஞ்சி அரையிறுதி விளையாடுவதற்கு அனுப்பி வைக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. ஏனென்றால் கேஎல்.ராகுல் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு கிடைக்க மாட்டார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் எந்த வீரருக்காவது பந்து தலையில் படுவது போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடந்தால், அந்த வீரருக்கு மாற்றாக ஒரு பேட்ஸ்மேன் விளையாட வேண்டி வந்தால் ரஜத் பட்டிதார் தேவைப்படுகிறார். இதுதான் பிசிசிஐ தயக்கத்திற்கு காரணம்.

- Advertisement -

ஆனாலும் கூட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கர்நாடக மாநில அணிக்காக விளையாடும், தற்பொழுது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மாறியுள்ள இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு தரப்படலாம் என்கின்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் to சாய் சுதர்சன்.. 2023-ல் ஆரம்பித்த அஜித் அகர்கரின் அதிரடிகள்.. முழு அலசல்

தேவ்தத் படிக்கல் உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் கடைசி 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 556 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ரன் சராசரி 92.66 ஆக இருக்கிறது. 193, 42, 31, 103, 105, 65, 21, 151 என ரன்கள் பிரமிக்கும்படி அடித்திருக்கிறார். எனவே இவர் ஐந்தாவது டெஸ்டில் களம் இறக்கப்படுகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது.