தோனி மக்களை மகிழ்விக்கிறார்.. வேற என்ன வேணும்? அவருக்கே எல்லாம் தெரியும் – சேவாக் கிண்டலான பேச்சு

0
525
Sehwag

நடப்பு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வெற்றியுடன் ஆரம்பித்து, முதல் பாதியை ஓரளவுக்கு சராசரியாக முடித்தது. இதற்கு அடுத்து இரண்டாவது பாதியில் பெரிய அளவில் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் தோனியின் பேட்டிங் ஆர்டர் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேவாக் தன்னுடைய பாணியில் நகைச்சுவையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. குறிப்பிட்ட அந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு மிக அதிகமாக இருந்தது. அந்த அணி வெற்றியை நோக்கி முழுமூச்சில் விளையாட வேண்டிய தேவை இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் அந்த அணி 16 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து விட மகேந்திர சிங் தோனி விளையாட வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் சர்துல் தாக்கூர் அனுப்பப்பட்டார். மேலும் தோனி ஒன்பதாவது இடத்திலேயே பேட்டிங் செய்ய வந்து கோல்டன் டக் ஆனார்.

அவர் குறைந்தபட்சம் தன்னை பேட்டிங் ஆர்டரில் எட்டாவது இடத்திற்கு பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். முன்கூட்டியே விளையாட வருவது கிடையாது. முன்கூட்டியே வந்தாலும் கடைசி 10 பந்துகளுக்கு விளையாட வருகிறார். இதனால் அணிக்கு தேவையான இடத்தில் அவரால் விளையாட முடியவில்லை.

- Advertisement -

இது குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருந்தபொழுது, தோனிக்கு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தசையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், தோனியை முன்கூட்டியே பேட்டிங் வரிசையில் அனுப்பி விளையாட வைப்பது காயத்தை பெரிதாக்கி அவரை விளையாட விடாமல் செய்யும் ஆபத்து இருப்பதாகவும், அவர் கடைசி இரண்டு ஓவர்களுக்கு பேட்டில் செய்யவும், ருதுராஜுக்கு களத்தில் ஆலோசனை சொல்லவும் போதும் எனவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்க்கு அதிரடியாக விளையாட தடை.. சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்த நிலையில் தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கிண்டலான முறையில் பேசியே சேவாக் கூறும்பொழுது “நான் இந்த விவாதத்தில் இறங்க விரும்பவில்லை. அவர் எங்கு பேட்டிங் செய்தாலும் பரவாயில்லை. அவர் நன்றாக விளையாடினார். அவர் மக்களை மகிழ்வித்தார். அவர்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் யார் கவலைப்படுகிறார்கள்?அவர் மகிழ்ச்சி அடைய செய்தார். அவ்வளவுதான் நாம் விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தோனியின் பேட்டிங் ஆர்டர் எதுவென்று தோனிக்கு நன்றாக தெரியும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -