AUSvsNZ.. 10 ஓவர்.. நியூசிலாந்து வொய்ட் வாஷ்.. வேற லெவலில் ஆஸ்திரேலியா வெற்றி

0
123
Australia

ஆஸ்திரேலியா அணி மிட்சல் மார்ஸ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடுகிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இன்று தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக டேவிட் வார்னர் வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் 33, ஸ்மித் 4 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து மேத்யூ ஷார்ட் 27, கிளன் மேக்ஸ்வெல் 22, ஜோஸ் இங்லீஷ் 14*, டிம் டேவிட் 8ரன் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலியா அணி 10.4 ஓவர்களுக்கு நான்கு விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தபொழுது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்வதற்கான நேரம் முடிந்து இருந்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு பத்து ஓவர்களில் 126 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற இலக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் 13, வில் யங் 14, டிம் செப்பர்ட் 2, கிளன் பிலிப்ஸ் 40, மார்க் சாப்மேன் 17 ரன்கள் எடுக்க, பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணியால் மூன்று விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்தத் தொடரின் மூன்று போட்டிகளையும் வென்று நியூசிலாந்தை அதன் சொந்த நாட்டில் வொயிட் வாஷ் செய்திருக்கிறது.

இதையும் படிங்க : “இங்கிலாந்து சின்ன பசங்களை விட அஸ்வின் ரொம்ப சுமாரா இருக்கார்” – தினேஷ் கார்த்திக் பேட்டி

டி20 உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆஸ்திரேலியா அணியின் டி20 கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் தற்போது அவர்கள் வசம்தான் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கோப்பை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.