“இங்கிலாந்து சின்ன பசங்களை விட அஸ்வின் ரொம்ப சுமாரா இருக்கார்” – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
77
Ashwin

இந்த முறை இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் வித்தியாசமான அனுபவங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக இந்தியாவில் சில ஆண்டுகளாக சுழல் பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இந்த முறை அப்படியான ஆடுகளங்கள் நிறுத்தப்பட்டு, பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன.

- Advertisement -

இப்படியான ஆடுகளங்களில் பந்துவீச்சு கொஞ்சம் எடுபடும் பொழுது அனுபவம் இல்லாத இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் அனுபவம் மிகுந்த இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக இல்லை.

பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக காணப்படும் சூழ்நிலைகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள். முதல் மற்றும் தற்பொழுது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓரளவு பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் பொழுது, இந்திய பந்துவீச்சாளர்களால் சரியாக இருக்க முடியவில்லை. ஆனால் இப்படியான சூழ்நிலையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள்.

இந்திய அணிக்கு இப்பொழுது இதுதான் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் நடக்கும் பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் தாண்டி எதிரணிகள் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம்.

- Advertisement -

ஆனால் இந்த முறை விக்கெட் எடுத்தாலும் அது நிலையானதாக இல்லை. அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவருக்கு நான்கு ரன்கள் மேல் கொடுத்து, 38 ரன் சராசரியில் மொத்தம் 12 விக்கெட்தான் கைப்பற்றி இருக்கிறார் என்பது இந்திய அணிக்கு கவலை தரும் விஷயமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “அனுபவம் இல்லாத இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ் சிறப்பாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க : பெண்கள் ஐபிஎல்.. 2 ஓவருக்கு 16 ரன்.. சர்ப்ரைஸ் செய்த ஆர்சிபி.. எதிர்பார்க்காத திருப்பம்

ஆனால் ரவீந்திர ஜடேஜா நிலையானவராக இல்லை. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முறை இந்தியாவில் சிறந்த டெஸ்ட் தொடரை கொண்டு இருக்கவில்லை. இந்தியாவில் நடைபெறும் நான்கு டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 5 விக்கெட் அல்லது நான்கு விக்கெட் எடுக்காமல் நீங்கள் அஸ்வினை அடிக்கடி பார்க்க முடியாது” எனக் கூறி இருக்கிறார்.