இந்திய கிரிக்கெட்

கம்பீரின் செல்லப் பிள்ளைகளுக்கு வாய்ப்பு.. சிஎஸ்கே பையனை செலக்ட் பண்ணது அர்த்தமே இல்லாதது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பவுலிங் யூனிட்டில் இரண்டு வீரர்களை தேர்ந்தெடுத்தது தவறானது என இந்திய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது கடுமையான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

தவறான காம்பினேஷன்

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, இடது கை ஸ்பின்னர் அக்சர் படேல், சைனா மேன் பவுலர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் அல்லது ரியான் பராக் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு திலக் வர்மாவை வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் அவர் இன்னும் பந்துவீச்சில் தன்னை நிரூபிக்கவில்லை.

- Advertisement -

இந்த பையன் எதுக்கு?

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “இந்த அணியில் ஹர்ஷித் ராணா எங்கிருந்து வந்தார்? அவர் ஐபிஎல் தொடரிலேயே மிகவும் மோசமாக இருந்தார். ஒரு ஓவருக்கு பத்து ரன்னுக்கு மேல் கொடுத்தார். இவரை தேர்ந்தெடுத்ததின் மூலமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவருக்கும் என்ன மாதிரியான செய்தியை சொல்கிறீர்கள்?”

இதையும் படிங்க : கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. காரணம் அகர்கர் கிடையாது.. ஆன்லைனில் வந்த இவர்தான் – வெளியான தகவல்கள்

“இப்போதைக்கு இவர்கள் திலக் வர்மாவை ஆறாவது பந்துவீச்சாளராக மாற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் அந்த இடத்திற்கு இவர்கள் அபிஷேக் சர்மா அல்லது சிவம் துபேவை கொண்டு வரப் போகிறார்களா? இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் அரிதாகவே பந்து வீசினார்கள். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்து உங்களுக்கு பந்து வீசக்கூடிய ஒரு ஆள் தேவைப்பட்டால் அதற்கு வாஷிங்டன் சுந்தர்தான் தகுதியானவர். எட்டாவது இடத்தில் சிவம் துபே இருப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் தராது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts