இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்டதற்கு பின்னால் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கிடையாது வேறு ஒருவர் இருக்கிறார் என்கின்ற செய்திகள் வெளியாகியிருக்கிறது.
நேற்று ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றது மட்டும் இல்லாமல் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அகர்கர் செய்தது என்ன?
நேற்று அணி அறிவிப்புக்கு முன்னால் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை கேப்டனாக யாரை கொண்டு வருவது என்பது குறித்து தீவிரமான விவாதத்தை அஜித் அகர்கர் உருவாக்கி இருக்கிறார். மேலும் அக்சர் படேலை தொடர்ந்து துணை கேப்டனாக நியமிப்பது குறித்தும் விவாதம் பெரிய அளவில் நடைபெற்று இருக்கிறது.
இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் அடுத்த கட்டமாக சூரியகுமார் யாதவுக்கு 35 வயது ஆகின்ற காரணத்தினால் இளம் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து ஆலோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து முடிவுகள் மாறி இருக்கிறது.
பின்னணியில் இருந்தது யார்?
அடுத்த இளம் கேப்டனை உருவாக்குவதற்கான ஆலோசனை ஆரம்பித்ததும் அப்போது ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆன்லைனில் வந்த இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடனடியாக அந்த முடிவை ஆதரித்திருக்கிறார். மேலும் அந்த பொறுப்புக்கு கில்லை கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நீங்க அத கவனிச்சீங்களா.. உறுதியா சொல்றேன் சாம்சங் ஓபனிங் பண்ண போறது இல்ல – கவாஸ்கர் பேட்டி
இதைத்தொடர்ந்து சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கும் முடிவை ஏகமானதாக எடுத்திருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் கம்பீரின் கைகளே பெரிய அளவில் இயங்கி இருக்கிறது. அஜித் அகர்கர் இந்த முடிவை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






