குல்தீப் விக்கெட் எடுக்க.. அஸ்வின் தந்த தெறி ஐடியா.. நீ உண்மையாவே சயின்டிஸ்ட்தான்பா

0
1310
Kuldeep

தற்போது இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 மற்றும் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியை வென்று இருக்கின்றன.

இந்த நிலையில் ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இன்று மதியம் வரையில் இங்கிலாந்து அணியின் கையே மூன்றாவது நாளிலும் ஓங்கி இருந்தது. பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருந்த ராஞ்சி ஆடுகளத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் போராடி 307 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இன்று மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு பின்பாக இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்தது.

இதுவரை போட்டியில் இங்கிலாந்து அணியே முன்னிலை வகித்தது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணி வேறு 53 ஓவர்கள் மட்டும் பந்துவீசி இங்கிலாந்து அணியை 145 ரன்களுக்கு சுருட்டி எறிந்து விட்டது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் முதன்முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். மேலும் முதல் இன்னிங்சில் பதவியில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் பற்றினார்.

இன்றைய இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சின் போது குல்தீப் யாதவ் தன்னுடைய பந்துவீச்சில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை செய்திருந்தார். அதனால் அவருக்கு விக்கெட் கிடைக்கவும் செய்தது. அந்த மாற்றத்தை குல்தீப் யாதவுக்கு கூறியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

அது என்ன மாற்றம் என்றால், ஆடுகளத்தில் பெரிதாக பந்து எதுவும் திரும்பவில்லை. மேலும் ஆடுகளம் மெதுவாகவும் இருந்தது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் இயல்பாகவே நடந்து வந்து மெதுவாகப் பந்து வீசக் கூடியவர்.

இதையும் படிங்க : “ரோகித் டிராவிட் எல்லார்கிட்டயும் கேட்டாங்க.. நான் கைய தூக்கினேன்.. நான் பண்ண சேஞ்ச் இது” – அஸ்வின் பேட்டி

எனவே பந்துவீச்சில் வேகத்தை கூட்டவும், கொஞ்சம் பந்தில் காற்றின் சுழற்சியை அதிகப்படுத்தவும், ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவை ஓடி வந்து பந்து வீச கூறியிருக்கிறார். ஓடிவந்து வீசும் பொழுது வேகமாக வீசுவதற்கும், பந்தில் சுழற்சியைக் கொடுப்பதற்கும் வசதியாக இருக்கும். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த ஐடியா குல்தீப்ப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்ற மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.