100வது டெஸ்ட்.. உலக கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை செய்த அஸ்வின்.. அதிரடி ரெக்கார்ட்

0
281
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக 9 இன்னிங்ஸ்களில் 712 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் இருக்கிறார்.

இதேபோல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் 10 இன்னிங்ஸ்களில் 26 விக்கெட்கள் கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி 22 விக்கெட்டும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 19 விக்கெட்டுகள் எடுத்தும் இருக்கிறார்கள்.

- Advertisement -

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. முதல் இரண்டு டெஸ்டுகள் அவருக்கு சுமாராகவே சென்றன. மேலும் ஆடுகளங்கள் ஐந்துமே சுழற்சிக்கு பெரிய அளவில் சாதகமாக அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி மூன்று டெஸ்டுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த முறையில் திரும்பி வந்தார். நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 500 வது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அந்த மகிழ்ச்சியான சூழலை அனுபவிக்க முடியாமலே குடும்ப அவசர மருத்துவ சூழல் காரணமாக சென்னை திரும்பி, மீண்டும் அணிக்கு வந்து பந்து வீசினார்.

இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி அவருக்கு சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்த தொடரில் விட்ட மொத்த மொத்தத்தையும் சேர்த்து தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தி அசத்தினார்.

- Advertisement -

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் நட்சத்திர பேட்ஸ்மேன்களின் ஐந்து விக்கெட்டை குல்தீப் கைப்பற்ற, அங்கிருந்து மேற்கொண்டு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து இன்னிங்ஸை 218 ரன்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கொண்டு வந்தார்.

மேலும் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் முதல் இன்னிங்ஸில் செய்த மாதிரி இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன்களின் 5 விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை வேகப்படுத்தினார்.

இதன் மூலம் நூறாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றினார். நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. இதன் மூலம் நூறாவது டெஸ்ட் போட்டியில் தனித்துவ சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : கிரிக்கெட் உலகில் யாருக்கும் நடக்காதது.. ஜெய்ஸ்வாலுக்கு நடந்த வினோத சம்பவம்.. ஒரே சின்ன ஆறுதல்

நூறாவது டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு :

ரவிச்சந்திரன் அஸ்வின் – இங்கிலாந்து – 9 விக்கெட்டுகள் – 128 ரன்கள்
முத்தையா முரளிதரன் – பங்களாதேஷ் – 9 விக்கெட்டுகள் – 141 ரன்கள்
ஷேன் வார்னே – தென் ஆப்பிரிக்கா – 8 விக்கெட் – 231 ரன்கள்