அஸ்வினின் 500வது விக்கெட்.. அம்பயர் முடிவாக இருந்தும் அவுட் இல்லை.. ரூல் புக் என்ன சொல்கிறது

0
286
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி வெற்றியை நோக்கி மிக வேகமாக பயணித்து வருகிறது.

இங்கிலாந்து அணி மூன்றாவது முடிவில் 399 ரன் இலக்குக்கு ஒரு விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு அந்த அணிக்கு 332 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதலில் அக்சர் படேல் ஒரு விக்கெட்டை எடுத்து துவக்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற ஆட்டம் கொஞ்சம் இந்தியா பக்கம் வந்தது.

ஆனால் ஜாக் கிரவுலி மற்றும் பேர்ஸ்டோ இருவரும் கொஞ்சம் பார்ட்னர்ஷிப் அமைக்க இந்தியா பக்கம் நெருக்கடி திரும்பியது. இந்த நிலையில் குல்தீப் மற்றும் பும்ரா மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இருவரையும் வெளியேற்ற ஆட்டம் இந்தியாவின் பக்கம் வந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பின்பு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சை ஸ்ரேயாஸ் அய்யர் அற்புதமான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது 500 வது விக்கெட்டை நோக்கி அஸ்வின் பந்து வீச ஆரம்பித்தார். ஆனால் பென் போக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சோதிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் டாம் ஹார்ட்லி ஸ்வீப் அடிக்க ரோகித் சர்மா அதை கேட்ச் பிடிக்க அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் டாம் ஹார்ட்லி ரிவ்யூ சென்றார். பந்து கையில் பட்டதாக தெளிவாகத் தெரிந்தது.

விதிப்படி எல்பிடபிள்யு செய்யப்பட்டு இருக்கிறதா என சேர்த்து சோதிக்கப்பட்டது. அதில் பந்து ஸ்டெம்பை தாக்கியது. ஏற்கனவே நடுவர் அவுட் கொடுத்திருந்ததால், பந்து ஸ்டெம்பை மேல் நோக்கித் தாக்கி இருந்தாலும், அம்பையர் கால் என்பதால், அது அவுட் எனவே எல்லோரும் நினைத்தார்கள்.

இதையும் படிங்க : 205 ரன்.. 4 விக்கெட்.. கடைசி ஐந்து நிமிடத்தில் நடந்த மேஜிக்.. அஸ்வின் அமர்க்களம்

ஆனால் நடுவர் கேட்ச் இல்லை தெரிந்ததும் நாட் அவுட் கொடுத்து மேலும் எல்பி டபிள்யு கொடுக்கவில்லை. ஏனென்றால் அம்பயர் முதலில் கேட்ச்காக மட்டுமே அவுட் கொடுத்திருந்தார். அடுத்து எல்பிடபிள்யூக்கு பந்து முழுமையாக ஸ்டெம்பை தாக்காமல் உரச மட்டுமே செய்திருந்தது. எனவே அதை அம்பையர்-காலில் பார்க்க முடியாது என அவுட் தரவில்லை. பந்து ஸ்டெப்பை முழுமையாக தாக்கி இருந்தால் மட்டுமே அவுட் தர முடியும் என்பது கேட்ச்க்கு அவுட் கொடுக்கும் பொழுது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஸ்வினின் 500 வது விக்கெட் தள்ளிப் போகிறது.