205 ரன்.. 4 விக்கெட்.. கடைசி ஐந்து நிமிடத்தில் நடந்த மேஜிக்.. அஸ்வின் அமர்க்களம்

0
2022
Ashwin

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கி இருக்கிறது.

இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு மூன்றாவது நாள் முடிவில் 67 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இன்று நான்காவது நாள் ஆரம்பத்தில் ஜாக் கிரவுலி மற்றும் ரேகான் அகமது இருவரும் இங்கிலாந்து அணிக்காக ஆட்டத்தை துவங்கினார்கள். அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடியான பேட்டியில் எந்த மாற்றமும் இல்லை.

வேகமாக பவுண்டரிகள் வர ஆரம்பிக்க அக்சர் படேல் ரேகான் அகமத்தை 23 ரன்களில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து உள்ளே வந்த முதல் ஆட்டத்தின் கதாநாயகன் போப் அதிரடியில் மிரட்டினார். ஆனால் அஸ்வின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவின் அபாரமான கேட்ச் மூலம் அவரும் 23 ரன்னில் வெளியேறினார்.

இந்த தொடரில் மூன்று இன்னிங்ஸில் பெரிதாக ரன் அடிக்காத இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் உள்ளே வந்து அஸ்வினின் முதல் பந்திலேயே பவுண்டரியில் ஆரம்பித்தார். அதிரடியாக பத்து பந்தில் 16 ரன்கள் எடுத்த ரூட்டை அஸ்வினே வெளியேற்றினார்.

- Advertisement -

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜாக் கிரவுலி இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் தாண்டி மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஜாக் கிரவுலி பந்தை காலில் வாங்கினார்.

இதற்கு அவுட் கேட்க அம்பயர் அவுட் தரவில்லை. இந்த நிலையில் குல்தீப் யாதவ் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரிவியூ செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி செல்ல வைத்தார். ரிவியூவில் பந்து மிகச் சரியாக லெக் ஸ்டெம்பில் பட ஜாக் கிரவுலி 23 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பான கடைசி ஓவரை பும்ரா வீச வந்தார். ஜாக் கிரவுலியுடன் நின்று நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடிய மேஸ்ட்ரோ அந்த ஓவரை எதிர்கொண்டார். பந்தை ஆடுகளத்தில் இருந்து பும்ரா உள்ளே எடுக்க, பேர்ஸ்டோ பந்தை தவறவிட்டு காலில் வாங்கினார்.

இதற்கு அவுட் அப்பில் கேட்க அம்பயர் நேரடியாகவே அவுட்ப கொடுத்து விட்டார். இங்கிலாந்து தரப்பில் ரிவ்யூ செல்ல, அம்பயர் முடிவு என்பதால் ஸ்டெம்பில் பந்து பட்டதால் அவுட் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து அணி திடீரென சரிவுக்கு உள்ளாகிவிட்டது. கடைசி நேரத்தில் குல்தீப் மற்றும் பும்ரா இருவரும் சேர்ந்து மிக முக்கியமான இரண்டு விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை இந்திய அணியின்திருப்பி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “இந்திய அணிக்கு அவங்க 2பேர் வர போறாங்க.. இந்த வீரர் வெளியே போகப் போறாரு” – ஜாகிர் கான் பேச்சு

தற்பொழுது இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 205 ரன்கள் தேவைப்படும் நிலையில், நான்கு விக்கெட் மட்டுமே இருக்கிறது. களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கடைசி முழுமையான பேட்ஸ்மேன் ஜோடியாக இருக்கிறார்கள். எனவே இந்திய அணி ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்திருக்கிறது என்று கூறலாம்.