“அஸ்வின் இந்த மேட்ச்ல இதை செய்யனும்.. நான் இந்த சீரியஸ்ல இதை செய்யனும்” – ஜடேஜா விருப்பம்

0
344
Jadeja

ஆசியாவை தாண்டி வெளியில் இருந்து வரும் நாடுகள் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது என்பது மிகப்பெரிய கடினமான காரியமாக எப்பொழுதும் இருந்திருக்கிறது.

ஆனால் அது தற்காலத்தில் இன்னும் மிகக் கடினமாக மாறி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் தற்காலத்தில் உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய சுழற் பந்துவீச்சாளர். இன்னொரு பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா நிலமை கொஞ்சம் சாதகமாக இருந்தால் எந்த அணியையும் சரிக்க கூடிய திறமைப்படுத்த சுழற் பந்துவீச்சாளர்.

மேலும் இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கீழ் வரிசையில் பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கக்கூடிய வகையில் இருக்கிறார்கள். இதனால் இந்திய அணிக்கு இரண்டு ஆல் ரவுண்டர்கள் கிடைக்கிறார்கள். இதன் காரணமாக பேட்டிங் நீளம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெரிதாக அமைகிறது. இதெல்லாம் சேர்ந்து இந்திய அணியை உள்நாட்டில் மிக வலிமையாக மாற்றுகிறது.

- Advertisement -

இதுவரையில் ஒட்டுமொத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருவர் இணைந்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்களாக லெஜெண்ட் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் இருந்தார்கள். தற்போது இவர்கள் அந்த சாதனையை முறியடித்து 500 விக்கெட்டுகளை தாண்டி இருக்கிறார்கள்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்பொழுது 500 வது டெஸ்ட் விக்கெட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு மேற்கொண்டு அதை எட்டுவதற்கு ஏழு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

இதுகுறித்து பேசி உள்ள ரவீந்திர ஜடேஜா “அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்தால் அது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இந்த போட்டியில் அவர் அதை பெறுவார் என்று நான் நம்புகிறேன். 300 விக்கெட்டுகள் எடுப்பதற்கு எனக்கு இன்னும் 25 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நான் இந்தத் தொடரில் அதை செய்வேன் என நினைக்கிறேன். ஆனால் அஸ்வின் இந்த ஆட்டத்திலேயே 500 விக்கெட்டுகளை முடிக்க விரும்புகிறேன். அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால்கிட்ட ஒரு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு.. இதுதான் ரன் குவிக்க வைக்குது” – ஜாகிர் கான் விளக்கம்

நான் அவருடன் இணைந்து பந்து வீசுவதை ரசித்து வேலை செய்கிறேன். இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இணைந்து பந்து வீசுவது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் ஃபீல்ட் செட், லைன் மற்றும் லென்த் நிறைய செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். மேலும் போட்டியை ரசித்து விளையாடிய இந்தியாவின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -