“ஜெய்ஸ்வால்கிட்ட ஒரு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு.. இதுதான் ரன் குவிக்க வைக்குது” – ஜாகிர் கான் விளக்கம்

0
225
Zaheer

இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தங்களுடைய புது பாஸ்பால் அணுகு முறையில் எவ்வளவு அதிரடியாக விளையாடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் இங்கிலாந்து சில காலமாக விளையாடி வந்த ரன் ரேட்டில் விளையாட முடியாமல் தள்ளாடியது. கேப்டன் ஸ்டோக்ஸ் மட்டுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டில் 88 பந்தில் 70 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் அதிரடியாக 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் 76 ரன்கள் குவித்து இருக்கிறார். பாஸ்பால் இங்கிலாந்துக்கு எதிராக, அவர்களது அணுகுமுறையை அவர்களிடமே காட்டி விட்டார்.

மேலும் அனுபவம் இல்லாத இங்கிலாந்து பவுலிங் யூனிட் ஜெய்ஸ்வால் அதிரடி முன்னாள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர் புத்திசாலித்தனமாக ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சாளர் திடீரென லைன் மற்றும் லென்த்தை மாற்றி வீசும் பொழுது, ஒன்று இரண்டு பந்துகளுக்கு மரியாதை கொடுத்தார். மீண்டும் அப்படியான பந்துகள் வரும் என்பதை உணரும் பொழுது, அதற்கேற்றபடி முன்னே வந்தோ அல்லது பின்னே சென்றோ எதிர்பார்க்காத நேரத்தில் பவுண்டரிகள் அடித்தார்.

- Advertisement -

அவர் அதிரடியை மட்டும் நம்பாமல், மிகச் சரியாகப் பந்துகளை கணித்து விளையாடிய காரணத்தினால், பந்துவீச்சாளர்களுக்கு அவர் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கொடுக்கவில்லை. ஆனால் ஒருபுறம் ரன்கள் குவிந்து கொண்டே இருந்தது. இதுதான் இன்றைய இரண்டாம் பகுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சினையாக அமைந்தது.

தற்போது ஜெய்ஷ்வால் பேட்டிங் பற்றி பேசியுள்ள ஜாகிர் கான் கூறும் பொழுது “ஜெஸ்வாலை இப்படியான காரணங்களால்தான் அதிகம் பாராட்ட வேண்டியிருக்கிறது. அவரிடம் என்ன மாதிரி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், அவர் தற்பொழுது முழு மதிப்பெண்களை பெறும் விதமாக எல்லா கேள்விக்கும் பதில்களை கூறி இருக்கிறார்.

ஒரு பேட்ஸ்மேன் ஃபிரண்ட் புட்டில் நன்றாக விளையாடினால், பந்துவீச்சாளர் பேக் புட்டில் விளையாட வைக்க முயற்சி செய்வார். மேலும் எந்த பேட்ஸ்மேன் ஆவது கால்களை நகர்த்தவில்லை என்றால், வந்து கொஞ்சம் மெதுவாக வீசி கால்களை பயன்படுத்தி விளையாடும்படி பந்துவீச்சாளர் கட்டாயப்படுத்துவார்.

இதையும் படிங்க : 6 ரன்கள் அறிவிப்பு.. திடீரென 5 ரன்னாக குறைத்த அம்பயர்.. என்ன காரணம்?.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

ஆனால் நீங்கள் பிரண்ட் புட், பேக் புட் என இரண்டிலும் சிறப்பாக விளையாடினால் உங்களால் பந்துவீச்சாளரை எப்பொழுதும் அழுத்தத்தில் வைத்திருக்க முடியும். ஜெய்ஸ்வால் இப்படி விளையாடக்கூடிய வீரர் என்கின்ற காரணத்தினால்தான் அவரால் பாசிட்டிவாக முதல் பந்தில் இருந்தே தாக்கி விளையாட முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.