இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரசியமாக இருப்பதோடு, எதிர்கால இந்தியா அணியின் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதற்கான தொடராகவும் அமைந்திருக்கிறது.
இந்த தொடரில் இதுவரை ரஜத் பட்டிதார், சப்ராஸ்கான் மற்றும் துருவ் ஜுரல் என மூன்று வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாட்டில் மட்டுமே இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாடிய முகேஷ் குமாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது இவர்கள் மட்டும் இல்லாமல் தேவ்தத் படிக்கல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் என இருவர் இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக உள்ளே நுழையும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
எனவே இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு முக்கியமான தொடராக இருக்கிறது. முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடிய இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது, நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.
மேலும் இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் பற்றி கூறும் பொழுது ” இந்தத் தொடர் முடியும் பொழுது ஜெய்ஸ்வால் இந்தியாவின் மிக முக்கியமான வீரராக மாறி இருப்பார். அவரது நிலையே வேறு இடத்திற்கு சென்று இருக்கும்” எனக் கூறியிருந்தார். தற்பொழுது அவர் கூறியது அப்படியே பலித்திருக்கிறது.
இந்த நிலையில் ஜெய்ஷ்வால் பற்றி கூறியுள்ள கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” இந்திய நிலைமைகளில் இதுவரை ஜெய்ஸ்வாலிடம் ஒரு பலவீனத்தை கூட நான் பார்க்கவில்லை. அவருடைய பெரிய சவாலாக இருக்கப் போவது இந்தியா தாண்டி அவர் எப்படி ரன்கள் எடுக்கிறார் என்பதுதான். ஒருவர் தன்னுடைய கேரியரில் ஓய்வு பெறும்பொழுது உள்ளே வெளியே என சதங்கள் அடித்து இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஐஎல்டி டி20 லீக்.. பூரன் அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் எமிரேட் சாம்பியன்
கடந்த இரண்டு வாரங்களாக ஜெயிஸ்வாலை மிகக் நெருக்கமாக பார்க்கும் பொழுது அவரால் உலகின் எல்லா இடங்களிலும் சதங்களை அடிக்க முடியும் எனத் தெரிகிறது. அவர் நிச்சயம் ஒருநாள் இந்த விளையாட்டில் மிகச் சிறந்தவராக இருப்பார்” எனக் கூறியிருக்கிறார்.