கேஎல்.ராகுல் என்கிட்ட சொன்ன ரகசியம்.. ஐபிஎல் டீம் இப்படித்தான் செட் பண்ணனும் – அஸ்வின் பேச்சு

0
931
Ashwin

பிசிசிஐ 16 ஆண்டுகளாக நடத்திவரும் ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு நாட்கள் இடையில் ஒரு வாரத்திற்கும் குறைவாக இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த கணக்குகளோடும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்தான பல வகையான பேச்சுகள் சமூக வலைதளங்களில் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு அணியை ஏலத்தில் எப்படி உருவாக்க வேண்டும்? உருவாக்கிய அணியை எம்மாதிரியான கலாச்சாரத்தில் வழிநடத்த வேண்டும்? மேலும் தற்போது இருக்கும் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன? என்பது குறித்தான பல அலசல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் பொதுவாகவே வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காலங்களில் கிடைக்கும் ஓய்வில் செய்திகளில் வர மாட்டார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இதற்கு அப்படியே நேர் எதிரானவர். அவர் இந்திய அணியில் விளையாடாவிட்டால், அவருடைய யூடியூப் சேனல் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் உடனே வந்து விடுவார்.

இப்படி அவர் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கக்கூடியவராக இருக்கிறார். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அவருக்கு மிக நெருக்கம் உண்டு. எனவே தற்போது ஒவ்வொரு அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து அலசி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் கேப்டனை தன் அணியைத் தேர்ந்தெடுப்பது…

மேலும் அவர் பேச்சில் கிரிக்கெட் நுணுக்கங்கள் எப்பொழுதும் மிக அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இன்று பேசும் பொழுது, ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேப்டன்கள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது, அது பெரிய நன்மையை கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது என்கின்ற முக்கியமான விஷயத்தை அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக அவர் கூறும் பொழுது “கேஎல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சராசரியாக கேப்டன் பொறுப்பை நிர்வகித்து இருந்தாலும், அவர் லக்னோ அணியில் கேப்டன் பொறுப்புக்கு சென்ற பொழுது மிகச் சிறப்பாக இருக்கிறார். அவரே தனக்குத் தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்ததின் மூலம் கேப்டனாக என்ன செய்ய முடியும் என்பதை காட்டியிருக்கிறார். இப்படி கேப்டனே அணியை தேர்ந்தெடுப்பதற்கு நான் உறுதி அளிக்க முடியும். ஏனென்றால் நான் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஆன பொழுது, ஏற்கனவே அணி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பின்புதான் என்னை கேப்டன் ஆக்கினார்கள்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பிளேயர்ஸ் ரெஸ்ட் எடுக்க பயப்படுவாங்க.. ஏன்னா ஒரு மோசமான பழக்கம் இருக்கு – நசீம் ஷா பேட்டி

ஆனால் ஒரு கேப்டன் எழுத்தில் தன் வீரர்களை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது, தொடரில் நடக்கக்கூடிய எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பாளராக மாறுகிறார். மேலும் கேப்டன் தன்னுடைய சொந்த தவறுகளையும் புரிந்து கொள்ள முடியும். இந்த இடத்தில் கேப்டனுக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். இது குறித்து நான் கேஎல்.ராகுல் இடம் பேசிய பொழுது, இந்த விஷயத்தில் தனக்கு சரிவரக்கூடிய வீரர்களுடன் விளையாடினால், தன்னுடைய தவறுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.