பாகிஸ்தான் பிளேயர்ஸ் ரெஸ்ட் எடுக்க பயப்படுவாங்க.. ஏன்னா ஒரு மோசமான பழக்கம் இருக்கு – நசீம் ஷா பேட்டி

0
77
Naseem

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்து பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தும், நாட்டில் முதன்மையான விளையாட்டாக கிரிக்கெட் இருந்தும், பாகிஸ்தான் கிரிக்கெட் பெரிய அளவில் தடுமாறுவதற்கு, அணிக்குள் இருக்கும் அரசியல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒரே அணிக்குள் நான்கு குழுவாக கூட வீரர்கள் பிரிந்து இருந்த காலம் இருந்திருக்கிறது. இது குறித்து ஓய்வு பெற்ற பிறகு பல பாகிஸ்தான் வீரர்கள் பேசியிருக்கிறார்கள். மேலும் அணியில் கேப்டன் இருக்கும் பொழுது சில வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவது அணியை பாதிக்க கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்களுக்கு அவர்களது இடத்திற்கான பாதுகாப்பாற்ற தன்மை இருக்கின்ற காரணத்தினால், பொதுவாகவே அவர்கள் தங்கள் இடத்தை காப்பாற்றிக் கொள்ள விளையாடக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இதெல்லாம் அந்த அணி குறித்து வெளியில் முன்னால் வீரர்கள் பேசிய விஷயம்.

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாததோடு, ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மேலும் அந்த உலகக் கோப்பை தொடரில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசிம் ஷா காயத்தால் விளையாட முடியாமல் போனது பெரிய பின்னடைவை உருவாக்கியது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் கலாச்சாரம்

நசிம் ஷா காயத்திற்கு பிறகு தற்பொழுது மீண்டு வந்து பிஎஸ்எல் தொடர் விளையாட்டு வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் இருக்கும் பிரச்சினை குறித்து பேசிய அவர் “உண்மையாகவே எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு தேவை என்று தெரிந்தாலும் கூட, ஓய்வெடுக்க பயப்படுகிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. உங்களுடைய இடத்தில் யாராவது வந்து ஓரிரு போட்டிகள் நன்றாக விளையாடினால், அவர் உங்களுக்கு பதிலாக நிரந்தர வீரராக மாறுவார். இதனால்தான் ஓய்வெடுக்க பயப்படுகிறார்கள்.

- Advertisement -

மற்ற கிரிக்கெட் நாடுகளில் ஒரு வீரருக்கு ஓய்வளிக்கப்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக வந்து விளையாடும் வீரர் நன்றாக விளையாடினாலும் கூட, ஓய்வெடுத்த முக்கிய வீரருக்கு மீண்டும் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உடனே கொடுக்கப்படும். ஆனால் இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கிடையாது.

இதையும் படிங்க : 2-3 மாதம் கிடையாது.. நான் ஒரு சீரியஸ்க்கு ஒன்றரை வருஷம் முன்னாடி தயாராவேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு வீரர் தனக்கு உடம்பு முடியாவிட்டால் அது குறித்து கூறினால், உடனே அவரது அர்ப்பணிப்பு உணர்வு கேள்விக்குறியாகி விடும். ஒரு தொடருக்கு முன்பாக ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் விளையாடலாம் என்பதை பிசியோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் முடிவு செய்ய வேண்டும். இது குழப்பத்தை நீக்கும். எனக்கு ஆசியக் கோப்பை போட்டியின் போது கண்ணீர் விடும் அளவுக்கு வலி இருந்தது. தோள்பட்டையில் ஏதோ கிழிந்தது போல் உணர்ந்தேன். இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்த பொழுது 4 முதல் 8 சென்டிமீட்டர் காயம் உள்ளே இருந்தது” என்று கூறி இருக்கிறார்.