அஸ்வின் ஜடேஜா தனித்துவ சாதனை.. கும்ப்ளே ஹர்பஜன் கோல்டன் ரெக்கார்ட் முறியடிப்பு.. அசத்தும் ஜோடி

0
147
Ashwin

தற்பொழுது ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஹைதராபாத் ஆடுகளம், நடுப்பகுதியில் புல்கள் உடன், பேட்ஸ்மேன்கள் நெருங்கி ஆடுகின்ற இடத்தில் மிகவும் காய்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பந்து முதலில் இருந்து சூழலும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அந்த அணிக்கு துவக்கம் தருவதற்கு பென் டக்கெட் மற்றும் ஜாக் கிரவுலி இருவரும் களம் வந்தார்கள்.

இந்த ஜோடி ஆரம்பத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியது. பாஸ் பால் முறையில் அதிரடியாக ரன்கள் குவித்தார்கள். திடீரென எட்டு ஓவர்களில் ஆட்டம் இங்கிலாந்து பக்கமே சென்று விட்டது போல தோற்றமளித்தது.

உடனே ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரையும் பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். அவரது இந்த முடிவுக்கு கைமேல் மூன்று பலன் கிடைத்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி முதல் விக்கட்டுக்கு 55 ரன்கள் சேர்க்க பென் டக்கெட் அஸ்வின் கையில் 35 ரன் மற்றும் ஜாக் கிரவுலி 20 ரன் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா போப்பை 1ரன்னில் வெளியேற்ற, இங்கிலாந்து 60 ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாடி விக்கெட் கைப்பற்றியதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.

இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி அதிக விக்கெட் கைப்பற்றிய ஜோடியாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் 501 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருந்தார்கள். தற்போது இந்த கோல்டன் சாதனையை ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் உடைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 5 ரன் 3 விக்கெட்.. டக்கெட் சொன்னது அப்படியே நடந்தது.. ஆரம்பித்து வைத்த அஷ்வின்.. சைலன்ட் ஆன இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய ஜோடி :

502 – ரவி அஸ்வின்/ரவீந்திர ஜடேஜா*
501 – அனில் கும்ப்ளே/ஹர்பஜன் சிங்
474 – ஜாகீர் கான்/ஹர்பஜன் சிங்
431 – ரவி அஷ்வின்/உமேஷ் யாதவ்
412 – அனில் கும்ப்ளே /ஜவகல் ஸ்ரீநாத்