5 ரன் 3 விக்கெட்.. டக்கெட் சொன்னது அப்படியே நடந்தது.. ஆரம்பித்து வைத்த அஷ்வின்.. சைலன்ட் ஆன இங்கிலாந்து

0
357
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது இரு அணிகளும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகிறார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அந்த அணியில் அதிரடியாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் நீக்கப்பட்டு இருக்கிறார். தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்திய பந்துவீச்சை வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஆரம்பித்தார்கள். இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் அதிரடியாக வழக்கம்போல் பாஸ்பால் ஸ்டைலில் ஆரம்பித்தார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய முதல் எட்டு ஓவர்களில் 40 ரன்கள் தாண்டி வேகமாக இங்கிலாந்து தொடக்க ஜோடி பயணித்தது. இதற்கு அடுத்து சுழற் பந்துவீச்சாளர்கள் வர அவர்களின் ரன் ரேட் ஆரம்பத்தில் நின்றது. ஆனால் அவர்கள் சுழற் பந்துவீச்சாளர்களையும் தாக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வெளியில் திருப்பும் முறையில் இடது கை பேட்ஸ்மேன் பென் டக்கெட்டுக்கு ஒரு பந்தை வீசி ஆனால் உள்ளே கொண்டு வந்தார். ஏமாந்த டக்கெட் எல்பிடபிள்யு ஆனார்.

- Advertisement -

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே டக்கெட் நான் மீண்டும் அஸ்வின் கையில் ஆட்டம் இழப்பேன். ஆனால் அவர் கையில் ஆட்டம் இழக்கும் முதல் இடது கை பேட்ஸ்மேன் நான் கிடையாது. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னபடியே தற்பொழுது நடந்து விட்டது.

இதையும் படிங்க : “தோனி பாய் ரெண்டே விஷயம்தான் சொன்னாரு.. என் வாழ்க்கையே மாறிடுச்சு” – துருவ் ஜுரல் பேட்டி

இங்கிலாந்து முதல் விக்கெட் இழப்பில்லாமல் 55 ரன்கள் எடுத்திருந்தது. அங்கிருந்து அடுத்த ஐந்து ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. அஸ்வின் இரண்டு ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.