“ரூம்ல தனியா அழுதுகிட்டு இருந்தேன்.. ரோகித் செஞ்ச காரியத்தை மறக்கவே மாட்டேன்” – அஸ்வின் உருக்கமான பேட்டி

0
279
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆனால் அந்த சந்தோசத்தை அவரால் நீண்ட நேரம் கொண்டாட முடியவில்லை. அவர் தாய்க்கு அவசர மருத்துவர் உதவி தேவைப்பட்ட சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனே குஜராத் ராஜ்கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி, அவரது தாயை சந்தித்து விட்டு, மீண்டும் அணிக்கு திரும்பி வந்தார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலை குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ” நான் ராஜ்கோட் டெஸ்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி பிறகு, ஹோட்டல் வந்தும் கூட என் மனைவியிடம் இருந்து போன் வரவில்லை. அவர்கள் தனியாக ஏதோ மீடியாவை சந்தித்துக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தேன். பிறகு நான் ஏழு மணி அளவில் மாலை குளிக்க சென்ற பொழுது என் மனைவிக்கு போன் செய்தேன். அப்பொழுது அவரது குரல் உடைந்து அழ ஆரம்பித்தார். என்னுடைய அம்மா தலைவலியாக இருக்கிறது என்று மயங்கி சரிந்து விட்டார் என்று கூறினார். என்னை அணியில் இருந்து வீட்டிற்கு வர சொன்னார்.

எனக்கு அதற்கு எப்படி பதில் சொல்வது என்று எதுவுமே தெரியவில்லை. நான் மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். நான் தனியாக என்னுடைய ஹோட்டல் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன்.

இதன் பிறகு என்னிடமிருந்து எந்த பதிலும் வராததால், என் மனைவி ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் சாருக்கு சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கும்என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்னை நம்பி பிளேயிங் லெவனில் எடுத்திருக்கிறார்கள். நான் வீட்டிற்கு போனால் பத்து பேர் மட்டுமே இருப்பார்கள். ஏற்கனவே தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது. இந்த நிலைமையில் நான் சென்றால் ஒரு பந்துவீச்சாளர் குறைவாகிவிடும் என்று யோசித்தேன்.

- Advertisement -

அதே நேரத்தில் என் அம்மாவிடம் நான் எப்போது கடைசியாக பேசுவது என்று சிந்திக்கும் அளவுக்கு போய் விட்டேன். எப்படியாவது என் அம்மாவை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் சுய நினைவுடன் இருக்கிறாரா? என்று எனக்குத் தெரியாது. அவரைப் பார்க்க என்னை மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

அதற்கு முன்பாக நான் சென்னை செல்வதற்கு ராஜ்கோட்டில் இருந்து விமானங்களை தேடிக் கொண்டிருந்தேன். மாலையில் ராஜ்கோட்டில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இல்லை எனக் காட்டியது.

ராகுல் பாயும் ரோகித்தும் என்னுடைய ஹோட்டல் அறைக்கு வந்தார்கள். நான் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரோஹித் ‘ நீ முதலில் உன்னுடைய பேக்கை ரெடி செய்து கொண்டு இப்போதே கிளம்பு’ என்று கூறியதோடு, எனக்கு வாடகைக்கு விமானத்தை பிடித்து தருவதாக கூறினார்.

புஜாராவுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர் நிறைய பேரிடம் பேசி எனக்கு வாடகைக்கு விமானத்தை பிடித்து கொடுத்தார். அந்த விமானத்தில் இரண்டு மணி நேரத்தில் எப்படி வீடு திரும்பினேன் என்று தெரியவில்லை.

இந்த நேரத்தில்தான் ரோஹித் சர்மா என்னுடன் அணியின் பிசியோதெரபிசியில் ஒருவரான என்னுடைய நண்பரான கமலேஷை உடன் அனுப்பி வைத்தார். அணியில் இரண்டு பிசியோக்களில் ஒருவரான இவரை எப்படி என்னுடன் அனுப்ப முடியும் என்று ரோஹித் சர்மாவிடம் கேட்டேன்.

ரோகித் சர்மா செய்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். நான் கேப்டனாக இருந்தாலும் உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன். ஆனால் இப்படி உடன் ஒருவரை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவர் எப்படி யோசித்தார் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : “டி20 உலககோப்பை இந்திய அணியில் கோலி நீக்கமா?” – மோர்கன் கும்ப்ளே ஆதரவாக களத்தில் குதிப்பு

ரோகித் சர்மாவை நான் எப்பொழுதும் ஒரு சிறந்த தலைவராக பார்க்கிறேன். அவர் ஏதோ சிறப்பு வாய்ந்தவர். அவருடைய அன்பான இதயத்திற்குதான் அவர் ஐந்து ஐபிஎல் பட்டங்களோடு பல பட்டங்கள் வென்று இருக்கிறார். கடவுள் யாருக்கும் எதையும் எளிதில் கொடுக்க மாட்டார். இன்னும் பெரிதாக சாதிப்பார் என்று நினைக்கிறேன். நான் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்” என்று கூறி இருக்கிறார்.