“டி20 உலககோப்பை இந்திய அணியில் கோலி நீக்கமா?” – மோர்கன் கும்ப்ளே ஆதரவாக களத்தில் குதிப்பு

0
832
Virat

இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் மே மாத இறுதியில் முடிவடைந்த பிறகு, ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மே 25ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை முடித்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இறுதியாக இந்திய அணி உள்நாட்டில் வைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி, மூன்று போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் விராட் கோலி வீரராகவும் அழைக்கப்பட்டார்கள். இதன் மூலம் இவர்கள் இருவரும் அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென என்ற முழுவதும் சமூக வலைதளத்தில் விராட் கோலி இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து நீக்க இருப்பதாகவும், அவர் டி20 உலக கோப்பையில் விளையாட மாட்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் வாய்ப்பு என்பதாகவும் இன்னொரு செய்தியும் வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே இருவரும் விராட் கோலியின் டி20 கிரிக்கெட் பேட்டிங் குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படியான செய்திகள் பரவி வரும் வேளையில் இது விராட் கோலிக்கு ஆதரவான பேச்சாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இயான் மோர்கன் கூறும்பொழுது “நவீன கிரிக்கெட் யுகத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சிறந்த வீரர் உங்கள் அணியில் இருந்தால் நீங்கள் ஒவ்வொரு போட்டியில் இருந்தும் அவரிடம் சிறந்ததையே கேட்டு வாங்க வேண்டும்.கடந்த காலங்களில் அவர் போட்டியில் கொண்டு வந்த உத்வேகம் மற்றும் தீவிரம் அணியில் எல்லோரையும் உயர்த்தக்கூடியது” என்று கூறியிருக்கிறார்.

அனில் கும்ப்ளே கூறும் பொழுது “அவரின் பெரிய திறமை என்னவென்றால் அவர் எப்பொழுதும் சீராக ரன்கள் குவிப்பதுதான். நான் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்த பொழுது அவரை நான் பார்த்திருக்கிறேன். அண்டர் 19 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து அவர் இந்திய அணிக்குவிரும்பிய வகையில் செயல்படுவதற்கு, உடல் தகுதியில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு மிகவும் அருமையானது.

இதையும் படிங்க : “நான் உறுதியா நம்பறேன்.. இந்த 26 வயது இந்திய வீரர் நிறைய அதிசயம் பண்ண போறார்” – ஷிகர் தவான் பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் எப்படி என்பது நாம் அறிவோம். டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் சீராக ரன்கள் குவித்த விதம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது. அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷமும், அணுகுமுறையும் அணி தீவிரமாகச் செயல்பட உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.