பும்ராவ ஸ்வீப் ஷாட் விளையாடனுங்கறது என் கனவு.. இதுக்காக நான் தனியா தயாரானேன் – அஷுதோஷ் சர்மா

0
111
Bumrah

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரயில்வேஸ் அணிக்காக விளையாடும் அசுதோஸ் சர்மாவை இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இவர் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி டிராபியில் 11 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரராக வாங்கப்பட்ட இவர் தற்பொழுது பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கிறார்.

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகக் குறைந்த ரன்னில் சுருண்டு தோல்வியடையும் என்று இருந்த நிலையில், அந்த அணியை தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் தனி ஒரு வீரராக வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் அவர் மொத்தமாக 28 பந்துகள் சந்தித்து 7 மெகா சிக்ஸர்கள் அடித்து 61 ரன்கள் குவித்து எதிர்பாராமல் ஆட்டம் இழந்தார். மூன்று ஓவர்கள் மீதும் இருந்த நிலையில் அவர் மேற்கொண்டு ஒரு ஓவர் விளையாடியிருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கும். நேற்று அவர் அடித்த ஏழு மெகா சிக்ஸர்களில் உம்ராவை அடித்த ஸ்வீப் ஷாட் சிக்ஸர் ஆச்சரியப்படுத்தும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய அசுத்தோஸ் சர்மா ” எங்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சார் என்னிடம் ‘நீ வெறும் ஸ்லாகர் கிடையாது. நீ சரியான கிரிக்கெட் ஷாட் விளையாட முடியும். அதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். அவர் சொன்ன சிறிய வார்த்தைகள்தான் என்னை இப்பொழுது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நான் அதை மட்டுமே பின்பற்றுகிறேன்.

நான் பந்தை கடினமாக அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன் கிடையாது. நான் பந்துக்கு தகுந்தவாறு விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடருக்கும் முன்பு நான் என்னுடைய பயிற்சியாளர் அமீத் குரேஷியாவுடன் இருந்தபொழுது அவர் என்னிடம் ‘ நீ போட்டியின் நடுவில் நின்று விளையாடினால் உன்னுடைய அணி வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பில் இருக்கும்’ எனக் கூறினார். ஆனால்கடந்த இரண்டு ஆட்டங்களில் நான் போட்டியை முடிக்கவில்லை. ஆனால் இதுதான் கிரிக்கெட். இதை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நாம் பணியாற்றுவது முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி ஓவரில் கேப்டன் பொறுப்பை எடுத்த ரோகித்.. ஹர்திக்கை புறக்கணித்த ஆகாஷ் மத்துவால் – களத்தில் என்ன நடந்தது?

பும்ரா பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதற்காக நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். அது சரியாக உலகில் சிறந்த பந்து வீச்சாளருக்கு எதிராக வந்தது. பரவாயில்லை இது விளையாட்டின் ஒரு பகுதிதான்” என்று கூறியிருக்கிறார்