மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 14வது சீசன் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி பரபரப்பான இறுதி கட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு காணப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. பேட்டிங்க்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் மும்பை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சினால் குஜராத் அணி இந்த ஆடுகளத்தில் குறைவான ரன்களையே பதிவு செய்தது.
சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பேட்டிங்கை பார்த்து எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது.
அதற்கு ஏற்றார் போலவே தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது மும்பை அணி. இருப்பினும் மாற்றத்தை நிர்ணயிக்கக் கூடிய இறுதிக்கட்டத்தில் 19வது ஓவரில் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா அணியின் ஸ்பென்சர் ஜான்சன் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார்.
அவர் வீசி இரண்டு ஓவர்களில் முதல் ஏழு பந்துகளில் 23 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், அடுத்த ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இறுதிக்கட்டத்தில் ஓவர் வீசியது குறித்து கேட்கப்பட்ட போது பயிற்சியாளர் நெஹராவின் ஆலோசனை எனக்கு உதவியாக இருந்ததாகக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் “நிரம்பி வழிகின்ற ரசிகர்களின் முன்னிலையில் இந்த வெற்றி உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.பந்து வீசுவதற்கு முன்னர் ஆசிஷ் நெஹரா என்னிடம் அமைதியாக இருங்கள். நீங்கள்தான் வெற்றி பெற வைக்க போகிறீர்கள் என்று கூறினார். இந்த வார்த்தைகள் என்னை பதட்டமடையாமல் இருக்கவும், நீண்ட நேரம் அமைதியாக இருந்து நான் சிறப்பாக செயல்பட்டதற்கும் உதவியது” என்று கூறினார்.
இதையும் படிங்க: அவமானப்படுத்திய ரசிகர்கள்.. இனி நடக்காம இருக்க இத பண்ணுங்க- ஹர்திக் பாண்டியாவுக்கு மாஸ் ஐடியா கொடுத்த லாரா
இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட, உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் குவித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது பந்தில் ஆட்டம் இழக்க, வெற்றி வசம் அப்படியே குஜராத் பக்கம் திரும்பியது. இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. முதல் போட்டியில் தோல்வியடையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழக்கமான பார்முலா இந்த சீசனிலும் தொடர்கிறது