“இந்தியாவுல பவுலர்களுக்கு மரியாதை இல்ல.. அஸ்வினுக்கு கேப்டன் பதவி கொடுக்கல.. ஆனால்..” – அனில் கும்ப்ளே பேச்சு

0
94
Kumble

நாளை இமாச்சல் பிரதேஷ் தரம்சாலாவில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும்.

ஒரு வீரர் நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பு என்பது பல கிரிக்கெட் வீரர்களுக்கு நடக்காத ஒன்று. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் ஒரு வீரர் நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கு எடுப்பது எப்பொழுதும் அவரது மதிப்பு குறித்து மிக உயரிய அடையாளத்தை வழங்க கூடியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்து, தற்பொழுது 100வது டெஸ்ட் போட்டியிலும் விளையாட இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், லெஜன்ட் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்து விட்டார். அவர் சராசரி வீரர்களை தாண்டி எப்பொழுதோ வந்து விட்டார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மனம் திறந்து பாராட்டி நிறைய விஷயங்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சில வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் செய்து வந்ததை மக்கள் நிச்சயம் தவற விடுவார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் அப்படியான வீரர்தான். அவருடைய தரம் என்ன என்பது பற்றி மக்கள் உணர்ந்து இருப்பார்கள். அவர் என்ன சாதித்து இருக்கிறார் என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இதுதான் நம் நாட்டில் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு புரிந்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

ஒருவேளை அவர் ஓய்வு பெறும் பொழுது அவருடைய மதிப்பு என்ன என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னுடைய புத்தகத்தில் நாட்டுக்காக விளையாடிய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் பெயர் மேலே இருக்கிறது. விளையாட்டின் மீதான அவரது பசியையும் ஆர்வத்தையும் நான் எப்பொழுதும் விரும்புகிறேன்.

மேலும் பந்துவீச்சு தாண்டி அவர் பேட்டிங்கிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மேலும்களத்தில் கொடுக்கும் யோசனைகள் அற்புதமானவை. அவருக்கு வெளிப்படையான கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை. ஆனால் அணியில் அவர் ஒரு கேப்டன் போலதான் செயல்பட்டு வருகிறார். அது அவர் பெருமைப்படக்கூடிய ஒன்று.

இதையும் படிங்க : WPL 2024.. பெண்கள் கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து.. மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை புது சாதனை

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் வலிமையாக இருக்கிறார். நிச்சயம் அவர் நான் விக்கெட் வீழ்த்தியதை விட அதிகமாக முந்தி சென்று வீழ்த்துவார். அவர் இதுவரையில் காட்டி வந்த நிலைத்தன்மை ஆச்சரியமானது. இந்தியாவில் நீங்கள் ஒரு வீரராக ஒரு முறை காலரை உயர்த்தி விட்டால், தொடர்ந்து அதே மட்டத்தில் விளையாடுவது என்பது கடினமானது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -