தோனிக்கு எதிரா விளையாடறது நாங்க செஞ்ச பாக்கியம்ங்க.. யார்கிட்ட கேட்டாலும் ஒரு விஷயம் சொல்லுவாங்க – ஜோஸ் பட்லர் பேச்சு

0
4160
Buttler

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக மகேந்திர சிங் தோனி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தற்போது நடக்க இருக்கும் இந்த போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெறுவதற்கு மிக மிக முக்கியமான போட்டியாக அமைகிறது. அதே சமயத்தில் 16 புள்ளிகள் பெற்று இருந்தாலும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி தங்களது கடைசி போட்டியை ஐபிஎல் சீசனில் விளையாடுகிறது. மேலும் இந்த போட்டியை தோற்றால் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு வரமுடிவது மிகவும் கடினமாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்குள் ஒரு சோகமான செய்தி என்னவென்றால், ஒருவேளை இன்று மகேந்திர சிங் தோனி சேப்பாக்கத்தில் விளையாடுவது தான் அவருடைய கிரிக்கெட் கேரியரில், அந்த மைதானத்தில் கடைசி போட்டியாகவும் அமையலாம் என்பதும் இருக்கிறது.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து பேசி இருக்கும் ஜோஸ் பட்லர் கூறும் பொழுது “தோனிக்கு எதிராக விளையாடுவது ஒரு பாக்கியம். இந்த ஐபிஎல் தொடரில் நீங்கள் யாரிடம் கேட்டாலும், அவர்கள் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதை தான் அதிகம் விரும்புகிறார்கள் என்று கூறுவார்கள். அவரால் மட்டுமே இப்படியானதைச் செய்ய முடியும். இந்தியாவில் அவருக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 8 விக்கெட் வித்தியாசம்.. சிக்கந்தர் ராஸா அதிரடி.. பங்களாதேஷை பந்தாடிய ஜிம்பாப்வே வெற்றி

இந்த காரணத்தினால் நடக்க இருக்கும் போட்டிக்கு மிகவும் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. மேலும் இன்றைய போட்டி முடிவில் தோனி ஏதாவது பேசுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பு மீடியாக்களை தாண்டி ரசிகர்களுக்கு பெரிய அளவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.