“நான் உனக்கு தொப்பி கொடுத்தேன்.. கடைசியில அந்த துரதிஷ்டம் உன்னை தாக்கிடுச்சு” – சர்ப்ராஸ் கான் ரன் அவுட் பற்றி அனில் கும்ப்ளே கருத்து

0
251
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நேற்று முதல் நாளில் சர்பராஸ் கானின் அறிமுகம் எல்லோருடைய பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.

நேற்று ஆறாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த அவரின் அதிரடி ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் அவருடைய ரன் அவுட் பல சர்ச்சைகளை உருவாக்க, ரவீந்திர ஜடேஜா அது குறித்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

மேலும் நேற்று இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாவதற்கான தொப்பியை சர்ப்ராஸ் கானுக்கு இந்தியா அடியும் இல்லை ஜெட் அனில் கும்ப்ளே வழங்கினார். இங்குதான் ஒரு சுவாரசியமான சம்பவம் உருவாகி இருக்கிறது.

என்னவென்றால் அனில் கும்ப்ளே தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் ஆகி இருக்கிறார். அவர் அறிமுக போட்டிக்கு தொப்பி கொடுத்த சர்ப்ராஸ் கானும் ரன் அவுட் ஆக்கி இருக்கிறார். நேற்று அவர் விளையாடிய விதத்தில் ஒரு சதத்தை தவறவிட்டார் என்றும் கூறலாம்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள அனில் கும்ப்ளே ” சர்பராஸ் கான் பார்ட்னர்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் ஜடேஜாதான் செல்லில் சிக்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். அது நீங்கள் தெளிவாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்குகிறது. இதுதான் சர்பராஸ் கானுக்கு என்னால் அனுப்பப்பட்ட துரதிஷ்டத்திற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இது அவருடைய முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் போலவே தெரியவில்லை. அவருக்கு இருக்கும் திறமை பற்றி நாம் அறிவோம். மேலும் உள்நாட்டு தொடர்களில் சுழற் பங்குவீச்சாளர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சர்வதேச டெஸ்ட் மட்டத்தில் இதை மாற்றிக் கொள்வதற்கு ஒரு மனநிலை வேண்டும். அவருடைய ஆட்டம் முறையும் சுதந்திர மனநிலையும் மிக அருமையாக இருந்தது.

இதையும் படிங்க : “ஆக்ரா to நொய்டா.. இன்னைக்கு எல்லாரும் பார்ப்பாங்க.. இந்த டிரஸ்தான் முக்கியம்” – துருவ் ஜுரலுக்கு தினேஷ் கார்த்திக் செய்தி

அதே சமயத்தில் நிச்சயம் மார்க் வுட் மூலம் சோதிக்கப்பட்டார். ஆனால் சுழற் பந்துவீச்சாளர்களை அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் ஒரு பந்துக்கு ஒரு ரன் ஷாட் என விளையாடியது, பேக் புட்டில் சிங்கிள் ரொட்டேட் செய்தது என மிகச் சிறப்பாக விளையாடினார். இது அற்புதமான பேட்டிங்” எனக் கூறியிருக்கிறார்