ஆர்சிபிக்கு கோச்சா வந்ததுக்கு முக்கிய காரணம் இதான்.. இப்படித்தான் விளையாட போறோம்- ஆன்டி ஃபிளவர் பேட்டி

0
645
RCB

முதல் ஐபிஎல் சீசனில் உருவாக்கப்பட்ட எட்டு அணிகளில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மட்டுமே இதுவரையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத அணிகளாக இருந்து வருகின்றன.

இதில் மற்ற இரண்டு அணிகள் கோப்பையை வெல்லாததற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்லாததே பலராலும் கேலி கிண்டல்கள் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அந்த அணியில் விளையாடாத நட்சத்திர வீரர்களே இல்லை என்கின்ற அளவுக்கு பெரிய கூட்டமே விளையாடியிருக்கிறது. ஆனாலும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருந்த மைக் ஹெசன் மற்றும் சஞ்சய் பாங்கர் இருவரும் நீக்கப்பட்டு, தற்பொழுது ஆர்சிபி தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இவருக்கு பயிற்சியாளராக சர்வதேச மட்டத்தில் இங்கிலாந்து அணியை மாற்றி அமைத்ததில் பெரிய பங்கு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த அணிக்கு தற்பொழுது ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கொண்டுவரப்பட, இவர் அங்கிருந்து ஆர்சிபி அணிக்கு தலைமை பயிற்சியாளராக மாறி வந்திருக்கிறார்.

ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக வந்ததின் காரணம்

ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு ஏன் சம்மதித்தார்? அவருடைய நோக்கம் என்ன? அவர்கள் எப்படியான கிரிக்கெட்டை விளையாட போகிறார்கள்? அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியுமா? என்பது குறித்தான கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆன்டி பிளவர் கூறும் பொழுது “இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியில் பயிற்சியாளராக இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வேலையை நான் எடுக்க விரும்புவதற்கு மிகவும் முக்கியமான காரணம், இந்த அணிவுடன் இணைந்து என்னால் ஏதாவது சிறப்பாக செய்ய முடியுமா? என்று பார்ப்பதற்குதான். எனவே இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. எங்களிடம் உற்சாகம் கொண்ட வீரர்களும் இருக்கிறார்கள். எங்களுடையஅணியும் வலிமையானதாக இருக்கிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : அவர் திரும்ப வந்துட்டார்.. சிஎஸ்கே-க்கு இந்தமுறை இவரோட டீம்தான் பயம் காட்டும் – அஸ்வின் பேச்சு

எங்களுக்கு தற்பொழுது ஒரு பெரிய டோர்னமெண்டை வெல்லக்கூடிய வாய்ப்பு முன்னாள் இருக்கிறது. இதுபோன்ற போன்ற ஒரு பெரிய சவாலை எடுத்துக் கொள்ளும் பொழுது அது என்னுடைய பார்வையை எளிதாக்குகிறது. நாங்கள்நிச்சயம் அட்டாக்கிங் கிரிக்கெட்தான் விளையாடுவோம். இதுதான் எங்களை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு செல்லும். எங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பம் வந்து விட்டால், அங்கிருந்து எங்களால் தொடரை வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.