அவர் திரும்ப வந்துட்டார்.. சிஎஸ்கே-க்கு இந்தமுறை இவரோட டீம்தான் பயம் காட்டும் – அஸ்வின் பேச்சு

0
625
Ashwin

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மிகவும் வெற்றிகரமாக இருப்பதோடு, இரு அணிகளும் களத்தில் பெரிய எதிரிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிதான் ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக பெரிய முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.

இந்த முறை ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இரண்டு அணியிலும் மிகச் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். போட்டி கடைசி வரை தொடரும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

கடந்த முறை எல்லோரும் மும்பை கடுமையான சவால் கொடுக்கும் என்று நினைத்திருந்த பொழுது, சிஎஸ்கே முதலில் வான்கடேவில் வைத்து மும்பையை மிக எளிதாக தோற்கடித்தது. இதற்கு அடுத்து சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறந்த வரலாற்றை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் சுமாராக விளையாடி தோற்றது. கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை தோற்று இருப்பதால் நிச்சயம் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் கடும் சண்டையிடும்.

சிஎஸ்கே – கேகேஆர்

இந்த நிலையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய பிரச்சனையாக இருப்பதைவிட கௌதம் கம்பீர் இருக்கும் கேகேஆர் அணிதான் பிரச்சினையாக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சிஎஸ்கே அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பல ஆண்டுகளாக எதிரியாக இருந்து வருகிறது இருவரும் சமமாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறார்கள். உண்மையில் மும்பை இந்தியன் அணி 2013 ஆம் ஆண்டுதான் முதல் ஐபிஎல் கோப்பையை பெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் அவர்கள் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றார்கள். ஆனால் சிஎஸ்கே அணிக்கு மற்றொரு முள்ளாக இருந்தது கேகேஆர் அணிதான்.

- Advertisement -

அந்த அணிக்கு கேப்டனாக இருந்து கௌதம் கம்பீர் சிஎஸ்கே அணிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். குறிப்பாக 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் அடிக்க போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். நான் அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தேன். ஆனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் அவர்கள் எங்களை வென்றார்கள். சிஎஸ்கேவுக்கு கம்பீர் சிறந்த எதிரியாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க சச்சின் கிடையாது.. இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலிதான் கிரேட்.. காரணத்தை பாருங்க – நவ்ஜோத் சிங் சித்து கருத்து

எப்பொழுதும் விட்டு தராத கம்பீர் உடைய மனப்பான்மை எனக்கு மிகவும் பிடிக்கும். வேறு அணிகளில் இருந்து பார்த்தால் அவர் மீது கோபம் வரும். ஆனால் உள்ளிருந்து பார்த்தால் அவருடைய குணம் பிடிக்கும். தற்பொழுது அவர் லக்னோ அணியில் இருந்து கேகேஆர் அணிக்கு மென்டராக வந்திருக்கிறார். அவரை அந்த அணிக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர் இருக்க வேண்டிய சரியான இடம் அது. எனவே இந்த முறை அவர்கள் கடுமையாக சண்டையிட போகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.