சிஎஸ்கே-க்கு திரும்பிய பதிரனா.. ஆட்டநாயகன் முஸ்தஃபிசூர் நீக்கப்படுவாரா? என்ன மாற்றங்கள் நடக்கும் – முழு அலசல்

0
241
CSK

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மீண்டும் மிகவும் நம்பிக்கை உடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்திருக்கிறது.

மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகி இருக்க, புதிய கேப்டன் ருதுராஜ் முதல் போட்டியை சந்தித்தார். எனவே இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே வித்தியாசமான எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. அதை ஈடு கட்டும் விதமாக நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி இருந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் கடைசிக்கட்ட ஓவர்களுக்கு சிஎஸ்கே அணிக்கு பங்களாதேஷின் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஸ்பாண்டே இருவரும் பந்து வீசினார்கள். ஆரம்பத்தில் துஷார் தேஸ்பாண்டே பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்றாலும், இருபதாவது ஓவரை நன்றாகவே இருந்தார்.

யாருடைய இடம் காலியாகும்?

அதே சமயத்தில் நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் பந்துவீசி இறுதிக்கட்டத்திலும் பந்து வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் கைப்பற்றியிருந்தார். மேலும் நேற்றைய போட்டியில் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் மதிஷா பதிரனா சிஎஸ்கே அணியின் இறுதிக்கட்ட ஓவர்களுக்கான முக்கிய வீரராக இருக்கிறார். அவர் எப்பொழுது அணிக்குள் வந்தாலும் உடனே அவருக்கு அணியில் இடம் தந்தாக வேண்டும். இந்த நிலையில் முதல் போட்டியில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்குவது கடினமாக இருக்கும்.

- Advertisement -

எனவே தீபக் சகர், துஷார் தேஸ்பாண்டே, மதிஷா பதிரானா மற்றும் மொத்த முஸ்தபிசுர் ரஹ்மான் நால்வருமே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மதிஷா தீக்சனா நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சாக்கு சொல்ல விரும்பல.. நாங்க பஞ்சாப் கிட்ட தோத்தது இதனாலதான் – ரிஷப் பண்ட் வருத்தமான பேச்சு

ஏனென்றால் சென்னை தாண்டி வெளியில் விளையாடும் எல்லா போட்டிகளுக்கும் இப்படியான வேகப்பந்து வீச்சு யூனிட் இருந்தால் அது மிகச் சரியாக இருக்கும். அதே சமயத்தில் சென்னை என்றாலும் கூட, ரவீந்திர ஜடேஜா உடன் ரச்சின் ரவீந்தரா இருப்பதால் சுழல் பந்துவீச்சுக்கு பெரிய தேவை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிஎஸ்கே இந்த முறை வலிமையான வேகப்பந்து வீச்சு கூட்டணியுடன் விளையாடலாம்.