தோனியால் களத்தில் நடந்த சம்பவம்.. அசந்து போய் ரசல் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
949
Russell

நேற்று சென்னை சேப்பாக்கம்தோனி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதோடு தோனியும் முதல்முறையாக சிஎஸ்கே மைதானத்தில் பேட்டிங் செய்ய வந்தது பல சுவாரசியமான சம்பவங்களை உருவாக்கி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி பவர் பிளேவில் 56 ரன்கள் ஒரு விக்கெட் என பலமாக ஆரம்பித்தது, பின்பு ஜடேஜாவிடம் சிக்கி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. விளையாடிய மூன்று போட்டிகளிலும் பெரிய அதிரடி காட்டி வென்ற கேகேஆர் அணியை சிஎஸ்கே வெகு சாதாரணமாக மடக்கிக் காட்டியது.

- Advertisement -

இதற்கு அடுத்து சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 58 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். ரகானே சிறிய காயத்தால் நேற்று பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவான பொழுது, கேப்டன் பொறுப்பை எடுத்துக்கொண்டு பேட்டிங் செய்து கடைசி வரையில் ஆட்டம் இழக்காமல் இருந்து அணியையும் வெல்ல வைத்தார்.

இந்த நிலையில் வெற்றி பெறுவதற்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த பொழுது தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வந்த பொழுது 125 டெசிபல் சத்தம் ரசிகர்களால் உண்டானது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பதால் சத்தம் நீண்ட நேரம் தொடர்ந்தது.

அப்போது களத்தில் இருந்த கேகேஆர் அணியின் வீரர் ரசல் அவ்வளவு பெரிய சத்தத்தை காதுகளால் தாங்க முடியாமல் காதை பொத்திக் கொண்டார். மைதானத்தில் ஆரவாரம் அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது. பின்பு தோனி ஒரு ரன்கள் எடுக்க வெற்றிக்கான ரன்னை ருதுராஜ் எடுத்து ஆட்டத்தை முடித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிக்கு முன்னால் என்ட்ரி.. சிஎஸ்கே ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா.. அரங்கம் முழுவதும் சிரிப்பலை

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பின் ரசல் தோனி உடன் பேசிக்கொண்டு களத்தை விட்டு வெளியே வந்தார். இந்த புகைப்படங்களை கேகேஆர் அடியின் இயக்குனர் வெங்கி மைசூர் வெளியிட, அதற்கு ரசல் “இந்த உலகிலேயே அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனியாக மட்டும் தான் இருக்க முடியும்” என்று பதிவு செய்திருக்கிறார். நேற்று தோற்ற கொல்கத்தா அணி கூட மகிழ்ச்சியாகவே களத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.