2024 ஐபிஎல் அணிகளிடம் இருந்து அழைப்பு வந்ததா? – சர்ப்ராஸ் கான் சீரியஸான பதில்

0
91
Sarfaraz

26 வயதான சர்ப்ராஸ் கான் இந்திய அணிக்கு முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்களுடன் 200 ரன்கள் எடுத்தார். அதிரடியான இவரது பேட்டிங் அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.

அதே சமயத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி அணி இவரை கழட்டிவிட்டது. அந்த ஏலத்தில் இவரை எந்த அணிகளும் வாங்கவில்லை. தற்போது இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகவும் அதிரடியாக விளையாடியிருக்கின்ற காரணத்தினால், ஏதாவது வீரர்கள் காயம் அடைந்தால் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு 18 வயதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இவர் வாங்கப்பட்ட பொழுது, இவரிடம் இருந்த மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள், பெரிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களிடம் கூட கிடையாது என்பதுதான் உண்மை. ஆனால் இவரால் மிடில் வரிசையில் வந்து எதிர்பார்க்கும் படி அதிரடியாக விளையாட முடியவில்லை. எனவே இவருக்கு டாப் பார்டரில் இடம் கிடைக்கும் பொழுது, இவரால் பவர் பிளேவை பயன்படுத்தி ரன்கள் கொண்டுவர முடியும்.

இந்த வகையில் இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் மிகவும் சரியாக இருப்பார். மூன்றாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் வருகின்ற காரணத்தினால், மேலும் ஜிதேஷ் சர்மா இருக்கின்ற காரணத்தினால், மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தேவையில்லை. எனவே சர்பராஸ் கான் துவக்க வீரராக விளையாடும் பொழுது, மிடில் வரிசையில் சிக்கந்தர் ராசா, இல்லை பௌலிங் யூனிட்டில் ரபடா மற்றும் நாதன் எல்லீஸ் இருவரும் சேர்ந்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு குறித்து சர்ப்ராஸ் கான் இடம் கேட்ட பொழுது “ஒரு ஐபிஎல் சீசன் மிகப்பெரியது. எனவே வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. எனவே அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் கடினமான உழைப்பு மட்டுமே. நான்கடினமாக உழைக்க விரும்புகிறேன்.

- Advertisement -

நான் ஐபிஎல் தொடரில் அங்கமாக இருக்கவில்லை. ஆனால் எனக்கு ஐபிஎல் தொடரில் அழைப்பு வந்தால் நான் அதற்கு தயாராக இருக்க வேண்டும். எனவேஎன் வீட்டில் நான் பயிற்சியை தொடங்க வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக என்னுடைய சிவப்புப்பந்து பயிற்சியையும் தொடங்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 18 பந்து 20 ரன்.. 18வது ஓவரில் ஆரம்பித்த மேஜிக்.. பைனலுக்கு மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி ஆர்சிபி தகுதி

இப்போதைக்கு சர்பராஸ் கான் வாய்ப்பு என்பது மற்ற இந்திய பேட்மேன்களில் யாராவது காயம் அடைந்தால் மட்டுமே இருக்கிறது. எனவே இப்படி துரதிஷ்டவசமான வாய்ப்பு எதிர்பார்த்துதான் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் இவரை நிச்சயம் வாங்குவார்கள் என்று நம்பலாம்.