“ரோகித்துக்கு இப்படி செய்யக்கூடாது.. ஹர்திக் வசமா சிக்கிட்டாரு” – சிஎஸ்கே நட்சத்திர முன்னாள் வீரர் பேட்டி

0
231
Hardik

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் தான் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க முடியாத வினோதமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக தேசிய அணியை வழிநடத்தும் யாருக்கும், உள்நாட்டில் நடைபெறும் டி20 லீக்குகளில் கேப்டன் பதவி என்பது இயல்பான ஒன்றாக கொடுக்கப்பட்டிருக்கும். அவர் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடிவதால்தான் தேசிய அணிக்கும் கேப்டனாக இருக்க முடிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்து ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ள ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கேப்டன் பொறுப்பை ஏற்க கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்து இருப்பது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு அணிகளுக்கும் விளையாடி கோப்பையை வென்றிருக்கும் அம்பதி ராயுடு இந்த விவகாரங்கள் குறித்து தன்னுடைய கருத்தை மிக தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோஹித் சர்மா இன்னும் ஒரு வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கலாம். மேலும் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : பயிற்சியில் சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்.. வைரல் ஆகும் வீடியோ.. என்ன நடந்தது

குஜராத் அணியில் இரண்டு ஆண்டு காலம் விளையாடி வருகின்ற காரணத்தினால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் சீசன் கடினமானதாக இருக்கும். அவருக்கு மும்பை செட்டப் கொஞ்சம் கையாள கடினமானதாகவே இருக்கும். இதனால் அவருக்குஅதிக அழுத்தம் இருக்கிறது. அனைத்து நட்சத்திர வீரர்களையும் சேர்த்து வழி நடத்துவது சிரமமான விஷயம்” எனக் கூறியிருக்கிறார்.