விராட் கோலி தடுமாறுவதற்கு என்ன காரணம்? ஐபிஎல் தொடரால் வந்த முக்கிய பிரச்சனை.. கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

0
243
Virat

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டிரினிடாட் கயானா மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. தற்போது மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் பேட்டிங்கில் ஏமாற்றி இருக்கிறார். அவரது பேட்டிங் சரிவுக்கு மிக முக்கியமான காரணங்கள் குறித்து நிறைய கருத்துக்கள் வெளிவந்திருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக அவருக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை இந்திய அணிகள் இடம் கிடைத்ததோடு, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் துவக்க வீரராகவும் உயர்த்தியது. இந்த முடிவு மிகப்பெரிய தாக்கத்தை அளிக்கும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி மொத்தம் விளையாடி இருக்கும் 7 போட்டிகளில் 75 பந்துகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். முதல் சுற்று மற்றும் சூப்பர் எட்டு சுற்று, தற்போது அரையிறுதி என எல்லா போட்டிகளிலும் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. ஒரு போட்டியில் கூட அவரது பேட்டிங் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இல்லை.

இதற்கு மிக முக்கிய காரணமாக ரோகித் சர்மா அணியின் அணுகுமுறையும், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தின் தன்மையும் காரணமாக இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவதை ரோகித் சர்மாவின் அணி அணுகுமுறையாக வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி ஐபிஎல் தொடரில் பெரிய விவாதங்கள் சென்றது. அதே சமயத்தில் நடப்பு டி20 உலக கோப்பையில் ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன. இந்த நிலையில் தான் விராட் கோலி முதல் பந்தில் இருந்து அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் அடிக்கும்.. அதுக்கு முக்கிய காரணம் இந்த சம்பவம்தான் – அம்பதி ராயுடு பேச்சு

ஆனால் அவருடைய பேட்டிங் முறைக்கு இப்படி விளையாட முடியாது. மேலும் ஆடுகளமும் ஐபிஎல் ஆடுகளங்கள் இல்லை. இதன் காரணமாக தற்பொழுது விராட் கோலி சிக்கி இருக்கிறார். இந்த முறை விராட் கோலியை அவருடைய வழியில் விட்டிருந்தாலே நிறைய ரன்கள் வந்திருக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள்!