நான் அந்த விஷயம் பத்தி சொல்ல மாட்டேன்.. ஆனா இத வச்சுதான் எல்லாம் நடக்குது – இந்திய பவுலிங் கோச் பேட்டி

0
88
Paras

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பையும் இழக்கலாம் என்பதால் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது இந்திய பிளேயிங் லெவன் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பேசியிருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் என மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இதுவரையில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம் பெற்று வருகிறார்கள். நான்காவது சுழல் பந்துவீச்சாளரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகளே தெரியவில்லை. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருந்தால் கூட, நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்ப்பது கடினமான ஒன்றாகவே தெரிகிறது.

இந்த நிலையில் விளையாட வைக்கப்படாத சாகல் இடத்தில் ரிங்கு சிங்கை தேர்வு செய்திருந்தால், தற்போது சிவம் துபே இடத்தில் அவரை விளையாட வைத்திருக்கலாம், ஒரு அதிரடியான நம்பிக்கைக்குரிய பினிஷர் கிடைத்து இருப்பார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெளியில் பரவலாக பேசி வருகிறார்கள்.

தற்போது அணித்தேர்வு குறித்து பேசி இருக்கும் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் “அணியின் தேர்வு என்பது ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து தான் அமைகிறது. அதே சமயத்தில் இன்று நாங்கள் விளையாட இருக்கும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காது என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் கூட அணியின் சமநிலைக்காக மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடலாம். மற்ற ஆடுகளங்களில் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. பொதுவாக ஆடுகளம் நன்றாக வறண்டு பந்து நன்றாக திரும்பும் வகையில் இருக்காது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடரில் கில்லை வைத்து பிசிசிஐ புதிய திட்டம்.. ருதுராஜுக்கு இனி வாய்ப்பே கிடையாதா?.. வெளியான புதிய தகவல்கள்

அதே சமயத்தில் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் ஒத்துழைப்பதாக இருந்தால் ஒரு கூடுதல் சுழல் பந்துவீச்சாளரை நாங்கள் விளையாடுவோம். இது எங்களுக்கு அந்த நேரத்தில் விளையாட்டிற்குள் செல்ல சிறந்த வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.