பேட்டிங்ல சுப்மன் கில், பவுலிங்ல மோகித் சர்மா… ஆல்ரவுண்ட் பர்பார்மன்ஸ் கொடுத்து.. மும்பையை காலி செய்து குஜராத்! – பைனலுக்கு முன்னேற்றம்!

0
649

இரண்டாவது குவாலிபயரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஓப்பனிங் இறங்கிய சகா பன்னிரண்டு ரண்களுக்கு ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது சஹா-கில் ஜோடி. அடுத்ததாக உள்ளே வந்தார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை மேலே உயர்த்தியது. இதில் நங்கூரம் போல நின்று விளையாடினார் சாய் சுதர்சன்.

மறுபக்கம் கில் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். இவர் 49 பந்துகளுக்கு சதம் அடித்தார். 60 பந்துகளில் 10 சிக்ஸர்கள் உட்பட 129 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்சன் 43 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

கடைசியில் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 13 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

234 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிசன் கண்ணில் அடிபட்டதால் ஓப்பனிங் இறங்கவில்லை. நேஹல் வதேரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓபனிங் செய்தனர்.

நேஹல் வதேரா(4) மற்றும் ரோகித் சர்மா(8) இருவரும் மோசமான துவக்கம் அமைத்துக் கொடுத்து வெளியேறினர். உள்ளே வந்த வேகத்தில் வெளுத்து வாங்கிய திலக் வrமா 14 பந்துகளில் 43 ரன்கள் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.

துரதிஷ்டவசமாக ரஷித் கான் பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அதன் பின்னும் ரன் குவிக்கும் வேகத்தை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டார் சூரியகுமார் யாதவ். இவர் கேமரூன் கிரீன் உடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

அப்போது உள்ளே வந்த ஜோஸ் லிட்டில், கேமரூன் கிரீனை போல்ட் செய்தார். இவர் 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார். சூரியகுமார் விக்கெட்டை வீழ்த்தினால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிடலாம் என்று திட்டமிட்டு வந்த குஜராத் டைட்டன்ஸ் அனிக்கு மோகித் சர்மா உள்ளே வந்து சரியான நேரத்தில் சூரியகுமார் யாதவை போல்டு செய்தார். இவர் 38 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து உள்ளே வந்தவர்கள் ஒற்றை இழக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி. 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு செல்கிறது. நடப்பு சாம்பியன் ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேஷ்பாண்டே ரன்களை வழங்கும் மிஷின்..! கிண்டல் செய்த ரசிகர்.. ஒரே பதிலால் கிளீன் போல்ட்

வருகிற 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத்தில் நடைபெறுகிறது.