டி20 உ.கோ இந்திய அணியில் ருதுராஜ் இருக்க.. இந்த ஒரு காரணம் போதும் – ஆகாஷ் சோப்ரா ஆதரவு

0
69
Ruturaj

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம்இறுதியில் முடிவடைகிறது. இதற்கு அடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான இந்திய அணித்தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்படும். தற்பொழுது 90 சதவீத அணி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சில இடங்களுக்கு மட்டுமே பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக துவக்க ஆட்டக்காரர்களாக டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஜெயஸ்வால் இருவரும் நீடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் சரியாக விளையாடாத காரணத்தினால், தற்பொழுது அவருடைய இடமும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

மேலும் துவக்க ஆட்டக்காரர்களுக்கு பேக்கப்பாக வேறு எந்த துவக்க ஆட்டக்காரர்களையும் தேர்வு செய்யும் திட்டமும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இல்லை. காரணம் தேவைப்பட்டால் விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக வர முடியும். இதேபோல சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டால், அவராலும் தேவைப்பட்டால் துவக்க ஆட்டக்காரராக விளையாட முடியும். எனவே துவக்க இடத்திற்கு ஒரு வீரர் மட்டுமே தேவைப்படும் நிலையில், சுப்மன் கில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் என மூன்று வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “எப்பொழுதும் ருதுராஜ் எனக்கு முதன்மையான வீரராக இருப்பார். அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தற்பொழுது அவர் நன்றாகவும் பேட்டிங் செய்கிறார். எனவே அவர் டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் இந்திய அணியில் இருக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான். எனவே இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ரசிகர்.. ஷேர் செய்த முகமது நபி.. மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் என்ன நடக்கிறது?

தற்போது துவக்க இடத்திற்கு பெரிய போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில், ஏப்ரல் இறுதி வாரத்திற்குள் மூன்று துவக்க ஆட்டக்காரர்களும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்று சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.