ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ரசிகர்.. ஷேர் செய்த முகமது நபி.. மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் என்ன நடக்கிறது?

0
111
Hardik

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இடம் பெற்று இருந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது நபிக்கு ஹர்திக் பாண்டியா பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு பேட்டிங் செய்யவும் பெரிய வாய்ப்பு வரவில்லை.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் யாதவ் 78 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் கடைசியில் ஒரே பந்தை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு முகமது நபிக்கு கிடைத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 ரன்கள் எடுத்த பொழுது நான்கு விக்கெட்டுகளை பறித்து இருந்தது. ஜெரால்ட் கோட்சி மற்றும் பும்ரா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை அப்பொழுது கைப்பற்றி இருந்தார்கள். இந்த முறை பவர் பிளேவில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.

இதற்கு அடுத்து பவர் பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளரான ஸ்ரேயாஸ் கோபால் மட்டுமே இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். அணியில் இடம்பெற்று இருந்த ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச கேப்டன் ஹர்திக் பாண்டியா வாய்ப்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து ரன்கள் வழங்கிய ரொமாரியோ ஷப்பர்டுக்கு பந்து வீசும் வாய்ப்புகள் தந்தார்.

இந்த நிலையில் முகமது நபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவை விமர்சனம் செய்திருந்த பதிவை எடுத்து பதிவு செய்திருந்தார். அதில் அந்த ரசிகர் “உங்கள் கேப்டனின் சில முடிவுகள் மிகவும விசித்திரமானவை. அவை மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. நேற்று ஏன் முகமது நபி பந்து வீசவில்லை?” என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பகிர்ந்த முகமது நபி பின்பு நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அஷுதோஷ் சர்மா என்னை மாதிரி விளையாடல.. நான் தான் அவர் மாதிரி விளையாட நினைக்கிறேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

ஏற்கனவே கேப்டன் பொறுப்புக்கு ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா வந்தது மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பிரச்சினையாக சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது தனது அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த பதிவை முகமது நபி பகிர்ந்து இருப்பது பெரிய குழப்பங்களை உருவாக்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என்று கருதப்படுகிறது!